Asianet News TamilAsianet News Tamil

ரூ 20 கோடி லாபம்...!! அடித்து தூக்கிய சார்பட்டா பரம்பரை..!!

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் சுமார் 24 கோடியே 50 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட நிலையில், தற்போது லாபமே 20 கோடியை நெருங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 

Rs 20 crore profit for sarpatta parambarai movie
Author
Chennai, First Published Jul 27, 2021, 8:24 PM IST

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் சுமார் 24 கோடியே 50 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட நிலையில், தற்போது லாபமே 20 கோடியை நெருங்கியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் வழக்கமான தன்னுடைய பாணியில் இருந்து விலகி, குத்து சண்டை விளையாட்டை மையப்படுத்தி இயக்கி இருந்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. 1970வது-களில் வடசென்னையில் பாக்ஸிங் விளையாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த விளையாட்டை விளையாடுவதற்காக சில பரம்பரையை சேர்த்தவர்கள் இருந்தனர். இவர்களில் குறிப்பாகா சார்பட்டா பரம்பரை  மற்றும் இடியப்ப பரம்பரையை மையமாக வைத்து இந்த  படம் எடுக்கப்பட்டிருந்தது. 
 

Rs 20 crore profit for sarpatta parambarai movie

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி இப்படம் வெளியான நிலையில், படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறது. அதே போல் இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் தன்மை அறிந்து தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது படத்தின் மற்றொரு பிளஸ். குறிப்பாக கபிலன், ரங்கன் வாத்தியார், வேம்புலி, டான்சிங் ரோஸ், மாரியம்மா, டாடி போன்றோர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்துள்ளனர்.

Rs 20 crore profit for sarpatta parambarai movie

படத்தின் லாபம்:

24 கோடியே 50 லட்சம் ரூபாயில் உருவான இந்த படத்தின் சேட்டலைட் உரிமையை விஜய் டிவி 6 கோடி ரூபாய்க்கு கை பற்றியுள்ளது. டிஜிட்டல் ரைட்ஸை அமேசான் ப்ரைம் நிறுவனம் 24 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. ஆடியோ ரைட்ஸ் மாஞ்சா நிறுவனம்  50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்த படத்தின் ஓவர்சீஸ் மற்றும் மற்ற மொழிக்கான சாட்டிலைட் உரிமம் இதுவரை விற்கப்படவில்லை என்றாலும் சுமார் 3  வரை கோடிக்கு மேல் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தவிர இந்த படத்தின் ஹிந்தி உரிமையை பி4  நிறுவனம் 4  கோடியே 50 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. அதே போல் remake ரைட்ஸும் இதுவரை விற்கப்படாத நிலையில் சுமார் 3 கோடி வரை செல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

 

Rs 20 crore profit for sarpatta parambarai movie

மொத்தத்தில் 24 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு இந்த படத்தை தயாரித்த கே 4 ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் புரோடுக்ஷன் நிறுவனம், 38 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இதில் மட்டும் சுமார் 14 கோடி இவர்களுக்கு லாபம் வந்துள்ள  நிலையில், மிஞ்சி உள்ள மற்ற உரிமங்களும் விற்கப்பட்டால் 20 கோடிக்கு மேல் சார்பட்டா லாபத்தை அடித்து தூக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios