RRR: நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் கிடைச்சதுக்கு காரணம் நான் தான்.. அஜய் தேவ்கன் கிளப்பிய சர்ச்சை
இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் ஆலியாபட் ஆகியோர் நடித்திருந்தனர்.
நாட்டு நாட்டு பாடலுக்கு பல்வேறு விருதுகள் குவிந்து வந்தன. அந்தவகையில் கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்த பாடல் பெற்றதையடுத்து ஆஸ்கர் விருதுக்கு இந்த பாடல் நாமினேஷன் செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
சினிமாவில் அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை இருக்கு..! தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்..!
இந்நிலையில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் என்னால் தான் ஆர்ஆர்ஆர் ஆஸ்கார் விருது வென்றது என்று கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தனது வரவிருக்கும் போலா படத்தை முன்னிட்டு அதனை விளம்பரடுத்தும் விதமாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். போலா படம் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கைதி படத்தின் ரீமேக் ஆகும்.
இப்படத்தில் தபு நடிக்கிறார். அஜய் தி கபில் சர்மா ஷோவிற்கும் சென்றார் அஜய் தேவ்கன். அப்போது பேசிய அவர், ஆர்ஆர்ஆர் வெற்றிக்காக கபில் அஜய் தேவ்கனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த வாழ்த்துச் செய்திக்கு பதிலளித்த அஜய் தேவ்கன், இந்தப் படம் ஆஸ்கார் விருது பெற்றதே என்னால் தான் என்று நகைச்சுவையாக பதில் அளித்தார். அஜய் தேவ்கன் சிறப்பு தோற்றத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சல்வார் போட்ட சொர்க்கமே... டால் அடிக்கும் அழகில் ஏர்போட் வந்த ராஷ்மிகா! லேட்டஸ்ட் போட்டோஸ் கேலரி!