இந்த வருஷமும் ஆஸ்கர் மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு கிடைத்த ராஜமரியாதை - இதை கவனிச்சிங்களா?
ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி கடந்தாண்டு ஆஸ்கர் விருதை வென்ற ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திற்கு இந்த ஆண்டும் ஆஸ்கர் மேடையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன் ஹெய்மர் திரைப்படம் ஏழு ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் சென்றது. இதற்கு அடுத்தபடியாக புவர் திங்ஸ் திரைப்படம் நான்கு விருதுகளை வென்றிருந்தது. அதுமட்டுமின்றி இது கிறிஸ்டோபர் நோலனுக்கு மறக்க முடியாத ஒரு ஆண்டாக அமைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆகி ஒருமுறை கூட விருது வெல்லமுடியாமல் போன இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தற்போது முதன்முறையாக ஆஸ்கர் வென்றுள்ளதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. மறுபுறம் இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கரில் எந்த படமும் நாமினேட் ஆகவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அவர்களை குஷி படுத்தும் சம்பவம் ஒன்றும் ஆஸ்கர் விழாவில் அரங்கேறி உள்ளது.
இதையும் படியுங்கள்... ஒன்னில்ல ரெண்டில்ல ஒட்டுமொத்தமாக 7 விருதுகள்... ஆஸ்கர் மேடையை அதிரவிட்ட கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர்
அதன்படி, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்பட காட்சிகள் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது மேடையில் ஒளிபரப்பப்பட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதன்படி ஆஸ்கர் விருது விழாவில் உயிரைப் பணயம் வைத்து உருவாக்கப்படும் ஸ்டண்ட் காட்சிகளையும் அதன் பின்னணி உழைக்கும் ஸ்டண்ட் கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் சில காட்சிகள் திரையிடப்பட்டன.
அதில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. அதுமட்டுமின்றி ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் காட்சியும் சில வினாடிகள் திரையிடப்பட்டன. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Oscar 2024 Full Winners List : 96வது ஆஸ்கர் விருது விழா... வெற்றியாளர்கள் யார்; யார்? முழு லிஸ்ட் இதோ