Oscar 2024 Full Winners List : 96வது ஆஸ்கர் விருது விழா... வெற்றியாளர்கள் யார்; யார்? முழு லிஸ்ட் இதோ

96 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அதில் விருது வென்றவர்களின் முழு விவரத்தை தற்போது பார்க்கலாம்.

oscar 2024 96th Academy Awards full winners List gan

உலக சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விருது விழாவில் உலகெங்கிலும் இருந்து சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது அளித்து கவுரவப்படுத்துவர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகமலாக நடைபெற்றது. நகைச்சுவை நடிகர் ஜிம்மி கிம்மல் தான் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 96வது ஆஸ்கர் விழாவில் விருது வென்றவர்கள் யார்... யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை Da'Vine Joy Randolph வென்றுள்ளார். 'The Holdovers' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் குறும்படம்

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ஜான் மற்றும் யோகோவின் இசையால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட War Is Over என்கிற குறும்படத்துக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை 'தி பாய் அண்ட் தி ஹெரான்' திரைப்படம் வென்றுள்ளது. ஹயாவ் மியாசாகி மற்றும் தோஷியோ சுசுகி ஆகியோர் அவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை

சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'அனாடமி ஆஃப் எ ஃபால்' திரைப்படம் தட்டிச் சென்றது. ஜஸ்டின் ட்ரைட் மற்றும் ஆர்தர் ஹராரி ஆகியோர் அவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

சிறந்த தழுவல் திரைக்கதை

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை 'அமெரிக்கன் ஃபிக்‌ஷன்' திரைப்படம் வென்றுள்ளது. கார்ட் ஜெபர்சன் அவ்விருதை பெற்றுக்கொண்டார்.

சிறந்த மேக்கப்

சிறந்த மேக்கப் கலைஞருக்கான ஆஸ்கர் விருதை நதியா ஸ்டாசே, மார்க் கூலியர் மற்றும் ஜோஷ் வெஸ்டன் ஆகியோர் வென்றுள்ளனர். புவர் திங்ஸ் திரைப்படத்திற்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ஜேம்ஸ் பிரைஸ் மற்றும் சோனா ஹீத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். புவர் திங்ஸ் திரைப்படத்திற்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதும் புவர் திங்ஸ் திரைப்படத்துக்கு தான் கிடைத்துள்ளது. அப்படத்திற்கு ஆடை வடிவமைப்பு செய்த ஹோலி வேடின்சன் அவ்விருதை பெற்றுக்கொண்டார்.

சிறந்த சர்வதேச திரைப்படம்

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை The Zone of Interest என்கிற பிரிட்டன் படத்திற்கு கிடைத்துள்ளது. அப்படத்தின் இயக்குனர் ஜோனாதன் கிலாசர் அவ்விருதை பெற்றுக்கொண்டார்.

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ராபர்ட் டவுனி ஜூனியர் வென்றுள்ளார். ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்

Godzilla Minus One திரைப்படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. 

சிறந்த படத்தொகுப்பு

சிறந்த படத்தொகுப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ஜெனிஃபர் லேம் வென்றுள்ளார். ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஆவண குறும்படம்

சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது The Last Repair Shop என்கிற குறும்படத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இவ்விருது இந்தியாவின் எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்துக்கு கிடைத்திருந்தது.

சிறந்த ஆவணப்படம்

சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 20 Days in Mariupol வென்றுள்ளது. செர்னோவ், மிச்லே மிஸ்னர், ரேனே அரான்சன் ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

சிறந்த ஒளிப்பதிவு

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ஹொய்டி வேன் ஹொய்டிமா வென்றுள்ளார், ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை The Wonderful Story of Henry Sugar என்கிற குறும்படம் வென்றிருக்கிறது.

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்

சிறந்த ஒரினினல் ஸ்கோர் இசைக்கான ஆஸ்கர் விருதை லுட்விக் கொரான்சன் வென்றிருக்கிறார். ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஒரிஜினல் பாடல்

பார்பி படத்தில் இடம்பெற்ற What Was I Made For? என்கிற பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த நடிகர்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன் ஹெய்மர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சிலியன் முர்ஃபிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த இயக்குனர்

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிறிஸ்டோபர் நோலனுக்கு வழங்கப்பட்டது. ஓப்பன் ஹெய்மர் படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios