RRR box office: ராஜமௌலியின் இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் ரசிகர்களின் பேர் ஆதரவை பெற்று ஓடி கொண்டிருக்கிறது.
ராஜமௌலியின் இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் ரசிகர்களின் பேர் ஆதரவை பெற்று ஓடி கொண்டிருக்கிறது.

தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான எஸ்.எஸ். ராஜமௌலி. முன்னதாக இவர் இயக்கிய பாகுபலி, மாவீரம், பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரமாண்டமாக ரூ. 500 கோடி மெகா பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் உருவாக்கினார்.
நட்சத்திர பட்டாளங்கள்:
ராஜமௌலி, இயக்கத்தில் தெலுங்கில் இரு பெரும் நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்தை தெலுங்கு திரையுலகமே கொண்டாடி வருகிறது. இதில், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

உலக அளவில் வசூல் விவரம்:
ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இரண்டாவது நாள் முடிவில், ரூ.340 கோடியை தாண்டி வசூலை குவித்தது. இதையடுத்து, மூன்றாவது நாள் முடிவில் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து ஆர்.ஆர்.ஆர் படத்தின் மொத்த செலவை மூன்றே நாளில் பெற்று தந்தது.
பாகுபலி 1 vs ஆர்.ஆர்.ஆர் படம்:

ராஜமௌலி இயக்காதில் பிரபாஸ் நடிப்பில் உருவான பாகுபலி 1 திரைப்படத்தில், பிரபாஸிற்கு ஜோடியாக தமன்னா மற்றும் அனுஷ்கா நடித்துள்ளனர். மேலும், வில்லன் கேரக்டரில் ராணா மற்றும் நாசர் நடித்திருப்பார்கள். மேலும், சத்யராஜ், கடப்பா கதாபாத்திரத்தில் ஏற்று கட்சிதமாக நடித்திருப்பார். பிரமாண்டமாக, 180 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 650 கோடி வரை வசூல் சாதகை செய்தது.
உலக அளவில் வசூல் வேட்டை:

அதேபோல், இப்போது ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த மார்ச் 25ம் தேதி பிரமாண்டமாக வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தின் பட்ஜெட் 300ல் இருந்து 350 கோடி வரை என கூறப்படுகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் படம் செம்ம வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி, இதுவரை உலகம் முழுவதும் படம் ரூ. 650 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். இதன்மூலம் பாகுபலி 1 பட சாதனையை ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
