காருக்கு பேன்ஸி நம்பர் வாங்க பணத்தை வாரி இறைத்த ஜூனியர் என்.டி.ஆர் - எவ்வளவு செலவு பண்ணிருக்கார் தெரியுமா?
Junior NTR : கார் மீது அதீத பிரியம் கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் ஆடி முதல் பி.எம்.டபிள்யூ வரை ஏராளமான சொகுசு கார்களை வைத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் அமோக வரவேற்பை பெற்றது. இதில் கொமரம் பீம் என்கிற சுதந்திர போராட்ட வீரராக நடித்து அசத்தி இருந்தார் ஜூனியர் என்.டி.ஆர். ராஜமவுலி இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1,100 கோடி மேல் வசூலித்து சாதனை படைத்தது.
ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ.45 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இப்படத்தின் நினைவாக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை அவர் சமீபத்தில் வாங்கினாராம். அந்த காருக்கு தனது ராசியான எண்ணை நம்பராக பெற அவர் பல லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது.
கார் மீது அதீத பிரியம் கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் ஆடி முதல் பி.எம்.டபிள்யூ வரை ஏராளமான சொகுசு கார்களை வைத்துள்ளார். அவர் தற்போது புதிதாக வாங்கியுள்ள பி.எம்.டபிள்யூ காருக்கு தனது ராசியான நம்பரான 9999 ஐ பெற ரூ.11 லட்சம் செலவு செய்துள்ளாராம். இவர் வைத்துள்ள மற்ற கார்களுக்கு அதே நம்பர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Roshini Haripriyan : கவர்ச்சிக்கு தாவிய கண்ணம்மா... இணையத்தை கலக்கும் ரோஷினியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்