Roshini Haripriyan : கவர்ச்சிக்கு தாவிய கண்ணம்மா... இணையத்தை கலக்கும் ரோஷினியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
Roshini Haripriyan : கருப்பு நிற உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி பாத் டப்பில் அமர்ந்திருக்கும் நடிகை ரோஷினியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மனதில் எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு, சில சமயங்களில் அவர்களை தங்கள் வீட்டு பிள்ளைபோல் மக்கள் கொண்டாடுவதையும் பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. குறிப்பாக இதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
இந்த சீரியல் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்ததற்கு முக்கிய காரணம் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி தான். இதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார் ரோஷினி.
டி.ஆர்.பி-யில் கலக்கி வந்த இந்த சீரியலில் இருந்து ரோஷினி வெளியேறியதால் திடீர் சரிவை சந்தித்தது. அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் தற்போது கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.
சீரியலில் இருந்து விலகிய ரோஷினி, படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு அதிர்ச்சி கொடுத்தார்.
இது ஒரு புறம் இருந்தாலும் சினிமா பட வாய்ப்புகளை பிடிக்கவும் தொடர்ந்து முயன்று வருகிறார் ரோஷினி. இதற்காக சமூக வலைதளங்களில் விதவிதமான மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது கருப்பு நிற உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி பாத் டப்பில் அமர்ந்திருக்கும் நடிகை ரோஷினியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பட வாய்ப்பை பிடிக்க ரோஷினி கவர்ச்சிக்கு தாவி உள்ளதாக கமெண்ட் செய்துள்ளனர். நடிகை ரோஷினி இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடாமல் டுவிட்டரில் மட்டும் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Sruti Nakul : அடிக்கடி வரும் ஆபாச வீடியோ... ஒரே டார்ச்சரா இருக்கு - பகீர் கிளப்பிய நடிகர் நகுலின் மனைவி.!