Asianet News TamilAsianet News Tamil

அவருடைய ஹேர் ஸ்டைலுக்கு மாற 14 மணிநேரம் சலூனில் ஆடாமல் அசையாமல்...

இன்னும் பத்து தினங்களில் அதாவது ஜனவரி 25ம் தேதியன்று ரிலீஸாகவுள்ள ‘த நம்பி எஃபெக்ட்’ தனது வாழ்நாளின் கனவுப்படம் என்கிறார் மாதவன். இப்படத்துக்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொள்ள பதினான்கு மணிநேரம் அசையாமல் சலூனில் அமர்ந்திருந்த தகவலையும், புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Rocketry: The Nambi Effect
Author
Mumbai, First Published Jan 16, 2019, 12:02 PM IST

இன்னும் பத்து தினங்களில் அதாவது ஜனவரி 25ம் தேதியன்று ரிலீஸாகவுள்ள ‘த நம்பி எஃபெக்ட்’ தனது வாழ்நாளின் கனவுப்படம் என்கிறார் மாதவன். இப்படத்துக்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொள்ள பதினான்கு மணிநேரம் அசையாமல் சலூனில் அமர்ந்திருந்த தகவலையும், புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.Rocketry: The Nambi Effect

மாதவனின் ஒருவருட அயராத உழைப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ராக்கெட்- த நம்பி எஃபெக்ட்’. ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானி நம்பி நாராயணனின் உண்மைக் கதையான இதில் நம்பியின் 27 வயது முதல் 75 வயது வரையிலான தோற்றங்களில் வருகிறார் மாதவன். இதில் சிறிதும் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக சுமார் ஒரு ஆண்டு காலம் வேறு படங்களுக்கு கதை கூட கேட்காமல் இருந்திருக்கிறார் மாதவன். 

’அக்ஸர்’ மற்றும் ’தில் மாங்கே மோர்’ போன்ற படங்களை இயக்கிய தேசிய விருது பெற்றுள்ள ஆனந்த மஹாதேவன், நம்ம மாதவனுடன் இணைந்து  இந்தப் படத்தை இயக்குகிறார். 1994ஆம் ஆண்டு உளவுத் துறையால் குற்றம்சாட்டப்பட்டு கைதான நம்பி நாராயணன், 1996ஆம் ஆண்டு அக்குற்றச்சாட்டை சிபிஐ தள்ளுபடி செய்கிறது. உச்ச நீதிமன்றமும் இவ்வழக்கை 1998ஆம் ஆண்டு இவர் குற்றவாளி இல்லை எனக் கண்டறிந்து 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடுகிறது. Rocketry: The Nambi Effect

இதுகுறித்து நேற்றைய தனது பதிவொன்றில்,’நிராபராதியான நம்பியின் கதையைப் படமாக்க அரும்பாடு பட்டிருக்கிறோம். அவரது பாத்திரத்தை உள்வாங்கவே எனக்கு இரண்டு வருடங்கள் ஆனது. அதே போல் அவரது ஹேர் ஸ்டைலுக்கு மாற சலூனில் 14 மணிநேரம் ஆடாமல் அசையாமல் இருக்கவேண்டி வந்தது. இந்தக் கதை காலத்தின் அவசியம். இந்தக் கதையைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருப்பது ஒரு குற்றச்செயலுக்கு ஒப்பானதும் கூட’ என்கிறார். விட்டா படம் பாக்காதவங்களை தூக்கி உள்ள வச்சாலும் வைப்பாரு போலவே மாதவன்.

Follow Us:
Download App:
  • android
  • ios