சின்னத்திரையில், ஸ்டாண்ட்  அப் காமெடியனாக தன்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட, ரோபோ ஷங்கர் இன்று முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் படங்களில் முன்னணி காமெடியனாக நடித்து வருகிறார். 

மேலும் தன்னை தூக்கி விட்ட விஜய் தொலைக்காட்சியிலும், காமெடி  ஷோ ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார்.

இவர் செய்துள்ள ஒரு செயல் தான் இன்று பலரது மத்தியிலும் இவர் மீது ரசிகர்களுக்கு இருந்த மரியாதையை மேலும் உயர்த்தியுள்ளது. 

அதாவது... " தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த, தங்க மங்கை கோமதி மாரிமுத்துவிற்கு' அரசு சார்பில் பரிசு அறிவிக்காததற்கு முன்பே... அவரை பாராட்டி ரூ.1 லட்சம் கொடுக்க உள்ளதாக கூறினார்.

அவர் சொன்னது போலவே, ரோபோ சங்கர் கோமதி மாரிமுத்துவை நேரில் சந்தித்து,  ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். இந்த செயல் ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களையும் பாராட்ட வைத்துள்ளது. இந்த செய்தியை pro டைமண்ட் பாபு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.