MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ட்விஸ்ட் வைத்த சரவணணின் முன்னாள் காதலி... மயிலுக்கு வில்லியாக மாறும் அஞ்சலி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

ட்விஸ்ட் வைத்த சரவணணின் முன்னாள் காதலி... மயிலுக்கு வில்லியாக மாறும் அஞ்சலி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலை பிரிந்திருக்கும் சரவணன் தன்னுடைய முன்னாள் காதலி அஞ்சலியை சந்திக்கிறார். இதன் பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 09 2026, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், சரவணன் வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வருவதால், அவனை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவரச் சொல்கிறார் கோமதி. இதையடுத்து சரவணனும் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருக்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு அய்யரிடம் பிரசாதம் வாங்கிவிட்டு வரும் சரவணன், எதிரே வரும் ஒரு பெண் மீது தெரியாமல் மோதிவிடுகிறார். அதுக்கப்புறம் தான் தெரிகிறது, அவர் வேறுயாருமில்லை சரவணனுடைய முன்னாள் காதலி அஞ்சலி என்று. அதன்பின்னர் இருவரும் பேசத் தொடங்குகிறார்கள்.

25
கதிர் வாழ்க்கையில் நுழையும் அஞ்சலி
Image Credit : jiohotstar

கதிர் வாழ்க்கையில் நுழையும் அஞ்சலி

எப்படி இருக்க என விசாரிக்கிறார் சரவணன். உன் கணவர் நல்லா இருக்காரா என்று கேட்க, அதற்கு அஞ்சலி, தனக்கு டைவர்ஸ் ஆன விஷயத்தை சொல்கிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும், தற்போது அம்மா வீட்டில் தான் இருக்கிறேன் என்றும் அஞ்சலி கூறுகிறார். நம் சரவணனும் தன் மனைவி தங்கமயில் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி தங்கமயிலை விவாகரத்து செய்வதற்கான வேலைகளிலும் சரவணன் இறங்கி உள்ளதால், இனி அஞ்சலி பக்கம் சரவணன் ரூட்டை மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது.

Related Articles

Related image1
யார் அந்த அஞ்சலி?! நட்புக்காக காதல் மௌனமான கதை.! பாண்டியன் ஸ்டோரில் சரவணனின் அழகிய 'ஃப்ளாஷ்பேக்'!
Related image2
Pandian Stores 2: கோவிலில் சொக்கிப்போன சரவணன்.! நீதிமன்றத்தில் பொங்கிய தங்க மயில்.! புதிர்போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
35
மீனாவுக்கு போன் போடும் கோமதி
Image Credit : jiohotstar

மீனாவுக்கு போன் போடும் கோமதி

அதன்பின்னர் அஞ்சலி சரவணனின் போன் நம்பரை வாங்கிவிட்டு, கோவிலில் இருந்து கிளம்புகிறார். இனி அடிக்கடி போன் மூலம் இவர்கள் இருவரும் பேச வாய்ப்பு இருக்கிறது. மறுபுறம் சென்னையில் ஜோடிப்புறாக்களாக சுற்றி வரும் ராஜியும், கதிரும் ஜாலியாக பேசிக் கொண்டே கிளாஸுக்கு போகிறார்கள். இருவரும் ஆட்டோவில் செல்லும்போது ரொமான்ஸ் செய்கிறார்கள். இந்தப் பக்கம் மீனாவும், செந்திலும் பேசிக் கொண்டே ஆபிஸுக்கு செல்கிறார்கள். அப்போது கோமதி, மீனாவுக்கு போன் போட்டு பேசுகிறார்.

45
மீனா மீது கோபித்துக்கொள்ளும் செந்தில்
Image Credit : jiohotstar

மீனா மீது கோபித்துக்கொள்ளும் செந்தில்

ரொம்ப தனிமையில இருக்குற மாதிரி இருக்கு, அதனால நீ ஞாயிற்றுக் கிழமை வீட்டுக்கு வாடி என அழைக்கிறார். மீனாவும் ஓகே சொல்லிவிடுகிறார். சிறிது நேரத்தில் மீனாவுக்கு மற்றொரு ஃபோன் கால் வருகிறது. யார் என்று எடுத்துப் பார்த்தால் தங்கமயில் மீனாவுக்கு போன் போட்டு இருக்கிறார். இதையடுத்து இருவரும் பேசுகிறார்கள். அருகில் இருந்த செந்தில், இதையெல்லாம் நோட் பண்ணுகிறார். மீனா போன் பேசி முடித்த பிறகு, இன்னும் நீ தங்கமயில் கூட பேசிக்கிட்டு தான் இருக்கியா என கோபித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார் செந்தில்.

55
ராஜிக்கு சேலை வாங்கிக் கொடுக்கும் கதிர்
Image Credit : jiohotstar

ராஜிக்கு சேலை வாங்கிக் கொடுக்கும் கதிர்

ராஜியை கோச்சிங் கிளாஸில் விடச் சென்ற கதிர், தன்னுடைய அம்மா கோமதிக்கு போன் போட்டு பேசுகிறார். அப்போது நீ எடுத்தது தான் அம்மா கரெக்டான முடிவு, நீ ராஜியை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சது ரொம்ப நல்ல முடிவு என கதிர், கோமதியிடம் ஆறுதலாக பேசிக் கொண்டிருக்கிறார். இறுதியாக கோச்சிங் கிளாஸ் முடிந்து ஊருக்கு கிளம்ப இருவரும் தயாரான நிலையில், கதிர், ராஜியை அழைத்துக் கொண்டு புடவைக் கடை ஒன்றிற்கு செல்கிறார். அங்கு ராஜிக்கு பிடித்த புடவையை அவருக்கு எடுத்துக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
நிலாவுக்காக சேரனை அடிக்க பாயும் சோழன்... வானதியால் உறவுக்குள் ஏற்படும் விரிசல் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
ரோகிணிக்கு தெரியவரும் ரகசியம்... செல்வத்தை பழிவாங்கும் அருண் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
யார் அந்த அஞ்சலி?! நட்புக்காக காதல் மௌனமான கதை.! பாண்டியன் ஸ்டோரில் சரவணனின் அழகிய 'ஃப்ளாஷ்பேக்'!
Related Stories
Recommended image1
யார் அந்த அஞ்சலி?! நட்புக்காக காதல் மௌனமான கதை.! பாண்டியன் ஸ்டோரில் சரவணனின் அழகிய 'ஃப்ளாஷ்பேக்'!
Recommended image2
Pandian Stores 2: கோவிலில் சொக்கிப்போன சரவணன்.! நீதிமன்றத்தில் பொங்கிய தங்க மயில்.! புதிர்போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved