விஸ்வாசத்தின் சுவாசத்தை சுவாசித்தேன்; அஜித் உடனான சந்திப்பு குறித்து ரோபோ சங்கர் நெகிழ்ச்சி
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித்குமாரை சந்தித்தபோது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் ரோபோ சங்கர். இவரின் திறமையை பார்த்து வியந்துபோன தனுஷ், தன்னுடைய மாரி படத்தில் ரோபோ சங்கரை முதன்மை காமெடியனாக நடிக்க வைத்தார். அப்படத்தில் அவர் பேசிய காமெடி டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ரோபோவுக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் குவிந்தன.
பின்னர் விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றிய ரோபோ சங்கருக்கும் கொரோனா காலகட்டத்திற்கு பின் பெரியளவில் பட வாய்ப்புகள் இல்லாததால், குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் அவரது சிறு நீரகத்தில் கோளாறு ஏற்பட்டு படுத்த படுக்கை ஆனார். அதுமட்டுமின்றி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போனார். பின்னர் குடியை நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்ற பின்னர் தான் உயிர்பிழைத்தார்.
இதையும் படியுங்கள்... பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா விடாமுயற்சி? அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லைகா
இதையடுத்து அவர் தனது ஒரே மகளான இந்திரஜாவுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தார். கார்த்திக் என்பவரை கரம்பிடித்த இந்திரஜா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அண்மையில் அவருக்கு வளைகாப்பும் நடத்தப்பட்டது. இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள வீடியோ செம டிரெண்டிங் ஆக உள்ளது. அது அவர் நடிகர் அஜித்தை சந்தித்தபோது எடுத்த வீடியோ என்பதால் அதற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.
சென்னை விமான நிலையத்திற்கு சென்றபோது அஜித்தை எதர்ச்சியாக சந்தித்ததாக கூறிய ரோபோ சங்கர், நீண்ட நாட்களுக்கு பிறகு விஸ்வாசத்தின் சுவாசத்தை சுவாசித்தேன். அன்புடன் நலம் விசாரித்தார். புது வருடத்தின் ஆரம்பம் ஏகே உடன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ரோபோ சங்கர். அவரது மனைவி பிரியங்காவும் அஜித்துடன் போட்டோ எடுத்துக்கொண்டார். நடிகர் அஜித்தும் ரோபோ சங்கரும் விஸ்வாசம் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... புத்தாண்டன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கு செம சர்ப்ரைஸ்