MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • புத்தாண்டன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கு செம சர்ப்ரைஸ்

புத்தாண்டன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கு செம சர்ப்ரைஸ்

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 69 மற்றும் அஜித்தின் விடாமுயற்சி ஆகிய படங்களின் அப்டேட் புத்தாண்டன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 31 2024, 02:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay, Ajith

Vijay, Ajith

நடிகர்கள் அஜித்தும் விஜய்யும் தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகர்களாக வலம் வருகிறார்கள். இதில் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்கள் தயாராகி வருகிறது. அதேபோல் விஜய் நடிப்பில் தளபதி 69 திரைப்படம் தயாராகி வருகின்றன. நடிகர் விஜய்யின் கடைசி படம் இது என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. மறுபக்கம் அஜித் உடல் எடையை குறைத்து நடித்துள்ளதால் விடாமுயற்சி படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஹைப் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Thalapathy Vijay, Ajithkumar

Thalapathy Vijay, Ajithkumar

விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனியும், தளபதி 69 படத்தை எச்.வினோத்தும் இயக்கி உள்ளனர். இதில் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். தளபதி 69-ல் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். இதில் விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் என்பதால் அப்படத்திற்கான இசையமைக்கும் பணிகளில் பிசியாக உள்ளார் அனி.

இதையும் படியுங்கள்... 2024-ல் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல் அள்ளிய திரையுலகங்கள் ஒரு பார்வை

34
Vidaamuyarchi Update

Vidaamuyarchi Update

இந்த நிலையில், புத்தாண்டன்று விஜய்யின் தளபதி 69 மற்றும் அஜித்தின் விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களின் அப்டேட்டும் அடுத்தடுத்து வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தன்று சர்ப்ரைஸாக வெளியிடப்பட வாய்ப்புள்ளதாம். இதனால் அப்படத்தின் டிரைலரை காண அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதேபோல் விஜய்யின் தளபதி 69 படக்குழுவும் புத்தாண்டன்று மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளதாம்.

44
Thalapahy 69 Update

Thalapahy 69 Update

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 69 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டன்று ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தளபதி 69 படத்தின் டைட்டிலும் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் 2025-ம் ஆண்டு புத்தாண்டு விஜய், அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 69 படத்துடன் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 241 படங்களில் 223 படங்கள் தோல்வி; 2024-ல் தமிழ் சினிமாவுக்கு இத்தனை கோடி நஷ்டமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Recommended image2
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Recommended image3
Now Playing
ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved