Asianet News TamilAsianet News Tamil

ஊசி போட்டு நடிச்சுட்டு இருக்கேன்! கோவை சரளா stretcher-ல வராங்க! ஸ்ரீமன் நிலை இதான்.. கொந்தளித்த ரோபோ ஷங்கர்!

சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர், 'கேன்' படப்பிடிப்பு தளத்தில் இருந்து... இயக்குனர் ஆடம்ஸ் தங்களை கொடுமை படுத்துவது போல் பேசி, வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Robo shankar emotional speech in can movie shooting spot mma
Author
First Published Mar 19, 2024, 6:23 PM IST

விஜய் டிவி மூலம் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறியப்பட்டு... தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருபவர் காமெடி நடிகர் ரோபோ ஷங்கர். இவருடைய மகள் இந்திரஜாவின் திருமண கொண்டாட்டம் ஒரு பக்கம் கலை கட்டிக்கொண்டிருக்க, மற்றொருபுறம்... ஷூட்டிங் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரோபோ ஷங்கர்.

ஊட்டியில் நடைபெறும் 'Can' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வரும் இவர்... இயக்குனர் ஆடம்ஸ் தங்களை கொடுமை படுத்துகிறார் என்பது போல் பேசியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், 'ரோபோ ஷங்கர் பேசி உள்ளதாவது'...  "என்னங்க இதெல்லாம் போய் வீடியோ எடுத்துட்டு இருக்கீங்க! சூட்டிங்காக ஊட்டிக்கு வந்தா, காலையில எத்தனை மணிக்கு கூப்பிடனும்? மெட்ராஸ்லையே பனிக்காலம் என்றால், கண்ட இடமெல்லாம் குளிருது. கை - கால் எல்லாம் சுருங்கி போகுது. ஆனால் காலையில ஆறு மணிக்கு எல்லாம் ஷூட்டிங் கூப்பிடுறாரு இயக்குனர் ஆடம்ஸ்.

Robo shankar emotional speech in can movie shooting spot mma

நான் மட்டும் நயன்தாராவுக்கு சளைத்தவளா என்ன? தரம் பிரித்து... லிஸ்ட் போட்டு.. கோடியில் கல்லா கட்டும் சமந்தா!

நான் மட்டும் இல்ல, ஸ்ரீமன் அண்ணன், தம்பி ராமையா, கோவை சரளா, மாறன் அண்ணன், கலையரசன், என அனைவரையும் உக்கார வைத்துள்ளார். கோவம் வருதுங்க எனக்கு!!  நான் ஊசி போட்டுக்கிட்டு நடிச்சிட்டு இருக்கேன். நான் பொய் சொல்ல மாட்டேன். பொய் சொன்னா எனக்கு பிடிக்கவே பிடிக்காது என தனக்கு ஊசி கையில் போடப்படும் இடத்தையும் காட்டி உள்ளார். மேலும் வெள்ளத்தில் கால் அடிபட்டு, கால் வீங்கி இருக்கு. இருந்தாலும் நடிக்க வந்திருக்கேன்!! ஆனா இவரு... காலை ஆறு மணிக்கு ஆரம்பிச்சு,  மறுநாள் 6:00 மணி வரைக்கும் ஷூட்டிங் நடிக்கணும்னு சொல்றாரு.

ஏன் பகலில் மேட்ச் பண்ணி எடுக்க தெரியாதா? படத்தோட டைட்டில் கேட்டா சொல்ல மாட்டேங்குறான்! டைம் கேட்டா சொல்ல மாட்டேங்குறான், சோத்த வாயில வைக்கிற நேரத்துல கூப்பிடுறான், வாயில வச்ச உடனே போங்கன்னு சொல்றான்! ஏன் தான் இப்படி பாடா படுத்துகிறானோ? இவன் என்ன ஆஸ்கருக்கா படம் எடுக்கிறான்... ஆடியன்ஸ்காக தானே படம் எடுக்கிறான்.

Robo shankar emotional speech in can movie shooting spot mma

அஜித், சூர்யா, தனுஷ், உள்ளிட்ட 5 முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்!

தம்பி ஆசைப்பட்டு கூப்பிட்டானு வந்துட்டேன். அந்த பொம்பளையும் பாவம், பக்கத்து ஹாஸ்பிட்டால இருந்து வந்து அப்பப்ப ஊசி போட்டுட்டு போகுது. நானும் அப்படியே ஊசிய போட்டுட்டு போட்டுட்டு நடிச்சுட்டு இருக்கேன். இன்னும் பாருங்க, கோவை சரளா அம்மாவா ஸ்டிக்ச்சர்ல  வச்சு தான் கூப்பிட்டு வருவாங்க... ஸ்ரீமன்கு ஒரு பக்கம் இழுத்துக் கொண்டது. தம்பி ராமையா, தவ்வி தவ்வி தான் வராரு. ஒவ்வொரு ஆளையும் இப்படி புடிச்சிட்டு வந்து புடிச்சிட்டு வந்து நடிக்க வச்சிட்டு இருக்காரு. பனி நாள்ல டயத்துக்கு சோத்தை போட்டு படுக்க வைக்க வேண்டாம். கொஞ்சம் கேப் விட்டா குரங்கு வேற வந்துடுது...என பேசிக்கொண்டே இதோ வந்து தொலைக்கிறேன் என செல்கிறார். மேலும் இந்த வீடியோ கேன் படத்தின் ப்ரமோஷனாக பார்க்கப்படுகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios