சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் பரோட்டா சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி. பெரிய தாடி, முறுக்கு மீசையுடன் கரத்த குரலில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவசி நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். 

உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசி மிகவும் ஏழ்மையான நிலையில் சிகிச்சைக்கு கூட பணமின்றி தவிப்பதாக வீடியோ வெளியானது. இதையடுத்து இதையடுத்து அவருக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, ரஜினிகாந்த், சிம்பு, விஜய் சேதுபதி, ரோபா சங்கர் உள்ளிட்ட பலரும் நிதி உதவி வழங்கினர். திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனம் மூலமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். 

 

இதையும் படிங்க: காதலரை கரம் பிடித்த விஜய் டி.வி. சீரியல் நடிகை... குவியும் வாழ்த்துக்கள்...!

கடைசியாக ரோபோ சங்கர் தான் தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, பண உதவியும் செய்திருந்தார். இந்நிலையில் நேற்று தவசி உயிரிழந்தது குறித்து ரோபோ சங்கர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தவசி அண்ணாவை கடைசியாக பார்த்தவர்களில் நானும் ஒருவனாக இருக்கக்கூடும். நான் சந்தித்த பிறகு யார் எல்லாம் அவரை பார்த்தார்கள் என்று தெரியவில்லை. பல பிரபலங்கள் அவருக்கு உதவி செய்துள்ளனர். அவருக்கு உதவி செ்யத அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இதையும் படிங்க: பூக்களால் ஆன மேலாடையில்... டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து தவிக்க விட்ட யாஷிகா... அதிரடி ஹாட் கிளிக்ஸ்...!

தவசி அண்ணா இறந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இது எப்படி சாத்தியம் என்று தோன்றியது. நான் அவரை இப்போத் தானே பார்த்துட்டு வந்தேன் என்று இருந்தது. ஐ ஆம் பேக் என்று அவர் என்னிடம் சொன்னாரே. மிகவும் கவலையாக இருக்கிறது. கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்யுங்கள் என திரையுலகினருக்கு கோரிக்கை வைத்துள்ளார். a