‘ஒன்ஸ் அபான் டைம் இன் அமெரிக்கா’, ’காட் ஃபாதர்’, ஸ்கார்ஃபேஸ்’’ ரோனின்’, த மிஷன்’, ஏஞ்சல் ஹார்ட்’ உட்பட பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் நாயகன் ராபர்ட் டி நீரோ தனது 75 வயதில் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்தார்.

ராபர்ட் டி நீரோ 1987-ம் ஆண்டு, லண்டனில் 'மிஸ்டர் சௌ’ என்ற உணவகத்தில் பணியாற்றி வந்த கிரேஸை சந்தித்தார். இருவரும் அடுத்த 10 வருடங்கள் காதலர்களாக இருந்தனர். 1997-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு எல்லியட் (20) என்ற மகனும், ஹெலன் கிரேஸ் (6) என்ற மகளும் உள்ளனர். 

கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்தனர். இப்போது இவர்கள் இருவரும் பிரிய முடிவெடுத்திருப்பாக செய்திகள் வந்துள்ளன. அடுத்த ஒரு வாரத்துக்குள் அதிகாரப்பூர்வமாக இதை அவர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்செய்தியை பல ஹாலிவுட் பத்திரிகைகள் உறுதி செய்துள்ளன.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே டிநீரோ விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். ஆனால் அப்போதைய பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டது. தற்போது நீரோவுக்கு வயது 75, கிரேஸுக்கு 63. நீரோவுக்கு ஏற்கெனவே டையான் அபோட் என்பவருடன் மணமாகி விவாகரத்தாகியுள்ளது. மேலும் டூகி ஸ்மித் என்பவருடனும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ராபர்ட் டி நீரோவின் தீவிர ரசிகர் நம்ம தல அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஓய்வு நேரங்களில் எல்லாம் ராபர்ட் டி  நீரோவின் படங்களை நூற்றுக்கும் மேற்பட்ட முறை பார்க்கும் வழக்கம்கொண்டவர் அஜீத்.