rk suresh movie thennattan
இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த "தாரைதப்பட்டை" படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகியவர் பிரபல தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான ஆர்.கே. சுரேஷ்.
ஒரு சில படங்களில் வில்லனாக நடித்த இவருக்கு தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே "வேட்டை நாய்" படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ் தற்போது மீண்டும் ''தென்னாட்டான் '' என்கிற புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தில் பூஜை நேற்று போடப்பட்டது.
இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார். படத்தைப் புதுமுக இயக்குநர் எம்.விஜய் பாண்டி இயக்குகிறார். திவிஷா ரேஷ்மா கிரியேஷன் சார்பில் சரவணன் தயாரிக்கிறார்.
' தென்னாட்டான் ' பட பூஜை இன்று தயாரிப்பு அலுவலகத்தில் எளிமையாக போடப்பட்டது. படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பைப் தொடங்குகிறார்கள்.
மேலும் இந்த படத்தின் நாயகி மற்றும் மற்ற நடிகர்களின் தேர்வு தீவிரமாக நடந்து வருவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
