நடிகராக ஆக வேண்டும் என திரையுலகிற்குள் வந்து, விநியோகஸ்தராக மாறியவர் ஆர்.கே.சுரேஷ்.   இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான நல்ல கருத்துள்ள படங்களை தயாரித்த தரமான தயாரிப்பாளர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

இவரின் கனவை நிறைவேற்றிய படம் என்றால் அது இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'தாரதப்பட்டை' படம் தான். இந்த படத்தில் ஒரு வில்லன் நடிகராக அறிமுகமாகி, முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என அனைவரிடமும் பாராட்டை பெற்றார். தற்போது 'பில்லா பாண்டி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் மாறியுள்ளார். 

இதை தொடர்ந்து, இவர் விரைவில் இயக்குனராக மாற உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இப்படம் தனுஷ் நடிப்பில் வெளியான "துள்ளுவதோ இளமை"  போன்ற ஒரு கதையம்சம் கொண்ட அடல்ட் படமாக இருக்கும் என கிசுகிசுக்கபப்டுகிறது. விரைவில் இப்பட பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.