Asianet News TamilAsianet News Tamil

3வது முறையாக பெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு... குவியும் வாழ்த்துக்கள்...!

தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணி 3வது முறையாக மீண்டும் போட்டியிட்டார்.

RK selvani third time selected as a Leader Of FEFSI
Author
Chennai, First Published Feb 7, 2021, 2:17 PM IST

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம் சுருக்கமாக ஃபெப்சி என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பிற்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2021-2023ம் ஆண்டிற்கான தேர்தல் வரும் பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

RK selvani third time selected as a Leader Of FEFSI

 

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராயையே மிஞ்சிய ஜெனிலியா... இரண்டு குழந்தை பெற்ற பின்பும் இப்படியா? சொக்கும் இளசுகள்...!

தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணி 3வது முறையாக மீண்டும் போட்டியிட்டார். இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியை தவிர்த்து யாரும் போட்டியிடாததால், தற்போது அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், “ஃபெப்ஸி என்றழைக்கப்படும்‌ தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தில்‌ 2021-2023ம்‌ ஆண்டுக்கான தேர்தல்‌ நடைபெற்றது. இதில்‌ ஆர்‌.கே.செல்வமணி தலைவராகவும்‌, அங்கமுத்து சண்முகம்‌ பொதுச்செயலாளராகவும்‌, பொருளாளராக பி.என்‌.சுவாமிநாதனும்‌ மூன்றாவது முறையாக ஏகமனதாக போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்‌.

RK selvani third time selected as a Leader Of FEFSI

 

இதையும் படிங்க: ‘சூப்பர் சிங்கர் 8’ஆதித்யா கிருஷ்ணன் இந்த பிரபல நடிகையின் மகனா?... வைரலாகும் அம்மாவுடனான போட்டோ...!

இவர்களுடன்‌ துணைத்தலைவர்களாக தினா, ஜே.ஸ்ரீதர்‌, எஸ்‌.பி.செந்தில்குமார்‌, வி.தினேஷ்குமார்‌, தவசிராஜ்‌ இணைச்செயலாளர்களாக ஏ.சபரிகிரிசன்‌, ஏ.சீனிவாசமூர்த்தி, ஏ.புருஷோத்தமன்‌, ஜி.செந்தில்குமார்‌, கே.ஸ்ரீபிரியா ஆகியோரும்‌ போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்‌. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்‌ சங்கத் தலைவர்‌ என்‌.இராமசாமி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள்‌ சங்கத்தின்‌ செயலாளர்‌ ஆர்‌.வி.உதயகுமார்‌, பி.ஆர்‌.ஒ.யூனியன்‌ தலைவர் விஜயமுரளி ஆகியோர்‌ வாழ்த்தினர்‌.சில தினங்களில்‌ பதவியேற்பு விழா நடைபெற உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios