தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் தலைவராக, ஆர்.கே செல்வமணி மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்த்திரையுலகில் மிக முக்கிய அங்கமான FEFSI, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட திரு ஆர்.கே. செல்வமணி அவர்களின் தலைமையில் கடந்த சில வருடங்களாக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் FEFSI-யின் ஊழியர்களின் நலனுக்காக அவர் எடுத்த பல முயற்சிகள் அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை குய்வித்தது.
பண மோசடி வழக்கில் 6 மாத சிறை..! இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களின் சங்கங்களுடன் இணக்கமாக பல வருடங்களாக அவர் பணியாற்றி வருகிறார். 2022-ல் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்களுக்கும் FEFSI-க்கும் ஏற்பட்ட புதிய சம்பளங்களின் ஒப்பந்தத்திற்கு மிக முக்கியமான காரணம் ஆர்.கே. செல்வமணிதான் .
நயன்தாராவுடன் ரொமான்டிக்காக டூயட் பாடும் ஷாருக்கான்! 'ஜவான்' பட பாடல் வீடியோ லீக் ஆனதால் ஷாக்!
அனைவரையும் ஒருங்கிணைத்து பயணிக்கும் ஆற்றல், ஆளுமை மற்றும் பல திறன்கள் கொண்ட ஆர்.கே. செல்வமணி, FEFSI-யின் தலைவராக மூன்றாவது முறையாக ஒருமனதாக மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டு மிகவும் பெருமிதம் கொள்வதாக அறிவித்துள்ளது.
