ஆர்.ஜே.பாலாஜிக்கு ஹாட்ரிக் ஹிட் கிடைத்ததா..! வீட்ல விசேஷம் படம் எப்படி இருக்கு? - டுவிட்டர் விமர்சனம் இதோ
veetla vishesham movie review : ஆர்.ஜே.பாலாஜி - என்.ஜே.சரவணன் இயக்கத்தில் சத்யராஜ், ஊர்வசி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் வீட்ல விசேஷம் படத்தின் டுவிட்டர் விமர்சனம்.
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் பதாய் ஹோ. இப்படத்தை தற்போது வீட்ல விசேஷம் என்கிற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர்.
ஊர்வசி, சத்யராஜ், யோகிபாபு, அபர்ணா பாலமுரளி, மயில்சாமி, ஆர்.ஜே.பாலாஜி, புகழ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தை வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கான டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
வீட்ல விசேஷம் திரைப்படம் பதாய் ஹோ படத்தின் சிறந்த ரீமேக் ஆக உள்ளது. சில புது சீன்களும் உள்ளன. காமெடி மற்றும் எமோஷன் சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. ஆர்ஜே பாலாஜி நடிகராகவும், இணை இயக்குனராகவும் ஸ்கோர் செய்துள்ளார். சத்யராஜின் நடிப்பு மனதில் நிற்கும்.
படம் முழுக்க எமோஷனும், காமெடி காட்சிகளும் சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. பேமிலி ஆடியன்ஸ் நிச்சயம் ரசிப்பார்கள். நடிகராகவும், இயக்குனராகவும் ஆர்ஜே பாலாஜி ஜெயித்துள்ளார். சத்யராஜ், ஊர்வசி, கேபிஏசி லலிதா ஆகியோர் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம்.
வீட்ல விசேஷம் ஒரு திடமான பொழுதுபோக்கு திரைப்படம். ஆர்.ஜே.பாலாஜி மற்றும் குழுவினர் என்ஜாய் பண்ணக்கூடிய படமாக இதை கொடுத்துள்ளனர். எமோஷனல் காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆக்ஷன் படங்களுக்கு மத்தியில் திருப்தியான குடும்ப படமாக இது உள்ளது. சத்யராஜ் தான் பாஸ்.
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும்போது இப்படம் ஏராளமான பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. எல்கேஜி, மூக்குத்தி அம்மன் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த ஆர்ஜே பாலாஜிக்கு இப்படம் ஹாட்ரிக் ஹிட்டாக அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... விக்ரம் வேதா இயக்குனர்களின் அடுத்த படைப்பு... சுழல் வெப் தொடர் கலக்கலா? சொதப்பலா? - டுவிட்டர் விமர்சனம் இதோ