விக்ரம் வேதா இயக்குனர்களின் அடுத்த படைப்பு... சுழல் வெப் தொடர் கலக்கலா? சொதப்பலா? - டுவிட்டர் விமர்சனம் இதோ
suzhal web series review : பிரம்மா மற்றும் அணுசரண் இயக்கத்தில் புஷ்கர் - காயத்ரி தம்பதி கதை, திரைக்கதை அமைத்துள்ள சுழல் தி வொர்டெக்ஸ் வெப் தொடரின் டுவிட்டர் விமர்சனம்.
விக்ரம் வேதா படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான புஷ்கர் - காயத்ரி தம்பதி, தற்போது ஒரு வெப் தொடருக்காக கதை, திரைக்கதை எழுதி உள்ளனர். சுழல் என பெயரிடப்பட்டுள்ள அந்த வெப் தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஷ்ரேயா ரெட்டி, பார்த்திபன் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடரை பிரம்மா மற்றும் அணுசரண் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். 8 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடரில் முதல் 4 எபிசோடை பிரம்மாவும், அடுத்த 4 எபிசோடை அனுசரணும் இயக்கி உள்ளார். இந்த வெப் தொடர் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அதன் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : புஷ்கர் காயத்ரியின் நேர்த்தியான கதை சொல்லல் விதம் ஒன்றி பயணிக்க வைத்துள்ளது. சுழல் தி வொர்டெக்ஸ் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. கடினமான உண்மையும், யதார்த்தமும் முக்கிய அம்சமாக இருக்கக்கூடாது, ஆனால் பேசப்பட வேண்டியவை. கதிர், ஷ்ரேயா ரெட்டியின் நடிப்பு சூப்பர்.
மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளதாவது: சுழல் தி வொர்டெக்ஸ் சிறந்த குற்ற புலனாய்வு வெப் தொடராக உள்ளது. அனைவரின் நடிப்பும் அருமை. புஷ்கர் காயத்ரி கதையை சிறப்பாக கையாண்டுள்ளனர்.
மற்றொருவர் கூறுகையில், இந்த வெப் தொடர் 6 மணிநேரம் ஓடக்கூடியதாக இருந்தாலும், பார்க்கும்போது அப்படி தெரியவில்லை. நிறைய திறமையான அனுபவம் வாய்ந்த நடிகர்கள் நடித்துள்ளதால் கதை மீதான் ஈடுபாடு குறையாமல் பார்க்க முடிகிறது. மிஸ்ஸிங் கேஸ் மற்றும் தீ விபத்து ஆகியவற்றுடன் தொடங்கும் இந்த சீரிஸில் உள்ள அனைத்து டுவிஸ்ட்டுகளும் சூப்பர். புஷ்கர் காயத்ரி இதனை சிறப்பாக எடுத்துள்ளனர்.
சுழல் வெப் தொடர் 100 சதவீதம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக உள்ளது. படக்குழுவின் உழைப்பு அருமை. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பு என பாராட்டி உள்ளார்.
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது இந்த வெப் தொடர் பாசிடிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... திருமணத்துக்கு பின் வெளியான நயன்தாராவின் முதல் படம்... ஓ2 ஒர்த்தா? ஒர்த் இல்லையா? - டுவிட்டர் விமர்சனம் இதோ