திருமணத்துக்கு பின் வெளியான நயன்தாராவின் முதல் படம்... ஓ2 ஒர்த்தா? ஒர்த் இல்லையா? - டுவிட்டர் விமர்சனம் இதோ
Nayanthara O2 movie Review : அறிமுக இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, ரித்திக் நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி இருக்கும் ஓ2 படத்தின் டுவிட்டர் விமர்சனம்.
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிகளவில் நடித்து வருகிறார். அவ்வாறு இவர் நடித்த அறம், மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள படம் தான் ஓ2.
இப்படத்தை வெங்கட் பிரபுவிட,ம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகை நயன்தாரா 7 வயது குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். நயன்தாராவின் மகனாக யூடியூப் பிரபலம் ரித்திக் நடித்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம் இன்று நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
நயன்தாராவின் திருமணத்திற்கு பின் வெளியாகும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது. இன்று வெளியாகி இருக்கும் இப்படத்தின் டுவிட்டர் விமர்சனம் குறித்து தற்போது பார்க்கலாம்.
அதன்படி நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : ஓ2 படம் ஒரு டீசண்டான சர்வைவல் திரில்லர். நயன்தாரா நேர்த்தியாக நடித்துள்ளார். சிறுவன் ரித்திக்கின் நடிப்பு ரசிக்கும்படியாக உள்ளது. கதாபாத்திர தேர்வு, டெக்னிக்கல் டீம், இயக்குனர் விக்னேஷ் ஆகியோர் திறம்பட பணியாற்றி உள்ளனர். நல்ல ஒரு படத்தை தேர்ந்தெடுத்துள்ளது டிரீம் வாரியர் பிக்சர்ஸ்.
மற்றொருவர் இப்படம் குறித்து தெரிவித்துள்ளதாவது : கதைக்களம் புதிதாக இருந்தாலும் இதில் சில பிழைகள் உள்ளன. எல்லாரும் உயிருக்கு போராடும் போது நயன்தாரா மட்டும் எப்படி கிளைமாக்ஸ் வரை தாக்குபிடித்தார். சில பகுதி மட்டுமே விறுவிறுப்பாக உள்ளது. மொத்த படமும் அப்படி இல்லை. சிறுவன் ரித்துவின் நடிப்பு சூப்பர். படம் இன்னும் நல்லா இருந்திருக்கலாம். இசை ஓகே ரகம் தான். இயக்குனர் விக்னேஷ் நல்ல முயற்சி.
மற்றொரு பதிவில், ஓ2 சிறந்த சர்வைவல் திரில்லர். குட்டி பையன் ரித்திக் சுப்பர். நயன்தாரா எப்போதும் போல் திறம்பட நடித்துள்ளார். கிளைமாக்ஸ் டுவிஸ்ட் எதிர்பாராதது. இயற்கை தான் நம்மை ஆபத்தில் சிக்க வைக்கும் ஆனால் அதுவே காப்பாற்றவும் செய்யும் என பதிவிட்டுள்ளார்.
படம் ஆவரேஜ் தான். நயன்தாரா நடிப்பு ஆசம். சிறுவன் மற்றும் போலீஸ் காரர் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். ஆனால் திரைக்கதையும், மேக்கிங்கும் மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஓ2 திரைப்படம் திரில்லிங் சர்வைவல் டிராமா. முதல் பாதி நன்றாக இருந்தது. இரண்டாம் பாதி ஆவரேஜ் தான். கிளைமாக்ஸில் லாஜிக் இல்லை, இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். ஒரு முறை பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... Nayanthara : அம்மாவான நயன்தாராவுக்கு தொல்லை கொடுக்கும் இயக்குனர் - வெளியான ஷாக்கிங் தகவல்