MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nayanthara : அம்மாவான நயன்தாராவுக்கு தொல்லை கொடுக்கும் இயக்குனர் - வெளியான ஷாக்கிங் தகவல்

Nayanthara : அம்மாவான நயன்தாராவுக்கு தொல்லை கொடுக்கும் இயக்குனர் - வெளியான ஷாக்கிங் தகவல்

Nayanthara : காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நயன்தாரா, நடிப்பில் உருவாகி உள்ள படம் ஓ2. இப்படத்தை ஜி.எஸ்.விக்னேஷ் என்பவர் இயக்கி உள்ளார். 

1 Min read
Author : Ganesh A
Published : May 10 2022, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் விமர்சன ரீதியாக சறுக்கினாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. விஜய் சேதுபதி, சமந்தா, ரெடின் கிங்ஸ்லி, நயன்தாரா, ஸ்ரீசாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

24

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நயன்தாரா, நடிப்பில் உருவாகி உள்ள படம் ஓ2. இப்படத்தை ஜி.எஸ்.விக்னேஷ் என்பவர் இயக்கி உள்ளார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

34

தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் நடிகை நயன்தாரா, 8 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார். நயன்தாராவின் மகனாக யூடியூப் பிரபலம் ரித்விக் நடித்துள்ளார்.

44

இந்நிலையில், இப்படத்தின் வில்லன் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கே 13 என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் பரத் நீலகண்டன் தான் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளாராம். ஓ2 திரைப்படம் விரைவில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... Nayanthara New movie : ஓடிடி-யில் ஹாட்ரிக் ரிலீஸுக்கு தயாரான நயன்தாரா... சர்ப்ரைஸாக வந்த மாஸ் அப்டேட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
Recommended image2
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image3
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved