பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ரேகா வெளியேறியுள்ளார். எனவே இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ள போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள போட்டி போட்டு திறமையை வெளிக்காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: ரவுடி பேபியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை முல்லை..! லோக்கல் ரியாக்ஷனில் இறங்கி கொடுத்த போஸ்!
 

நேற்றைய தினம் எளிமையான டாஸ்க்கை வைத்த பிக்பாஸ் இன்று கொஞ்சம் கடுமையான டாஸ்க் தான் வைக்கிறார். அதாவது தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் எட்டு பேர் ராஜா, ராணி, போன்ற கெட்டப்புகளும், மீதம் உள்ள எட்டு பேர், அரக்கர்கள் வேடமும் போட்டுள்ளனர்.

அரக்கர்கள் வேடம் போட்டுள்ளவர்கள் ராணி, ராணி, வேடம் போட்டவர்களை சிரிக்க வைக்க வந்தால், அவர்கள் சிலை போல் நிற்க வேண்டும் என்பது தான் இந்த டாஸ்க். 

மேலும் செய்திகள்: ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்...! அத்து மீறும் இளசுகள்..! இணையத்தை தெறிக்கவிட்ட போட்டோஸ்..!
 

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், ரியோவுக்கு 23 ஆம் புலிகேசி புகைப்படம் வருகிறது. சுரேஷ் அரக்கர் வேடத்தில் கெத்து காட்டுகிறார். ரியோ தான் போடவுள்ள ராஜா வேடத்திற்காக மீசை தாடி அனைத்தையும் மழித்து விட்டதை பார்த்த சுரேஷ், அவரை ரொம்ப அழக இருக்க என புகழ்கிறார். 

நேற்றைய தினம் சாதாரண விஷயத்திற்காக சுரேஷிடம் முட்டி கொண்ட ரியோவை சுரேஷ் இப்படி கொஞ்சுவதை  பார்த்த பலர், உண்மையில் அவர் பெரிய மனுஷன் என நிரூபித்து விட்டார் என கமெண்டுகளை தட்டி விடுகிறார்கள்.