பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் மட்டும் அனிதா சுரேஷுக்கு இடையே வந்த ஒரே ஒரு பிரச்சனை வாரம் முழுவதும் நீடித்தது. நேற்று முன் தினம் தான் கமல்ஹாசன் முன்னிலையில் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. அதே போல் சனம் - ரேகா இடையேயும், சனம் - சுரேஷ் இடையேயும் சில பிரச்சனைகள் வந்து ஓய்ந்தது.

ஆனால் பிக்பாஸ் முதல் சீசனில் பார்த்த பிரச்சனைகள் போல் இதுவரை ஒரு பிரச்சனை கூட பிக்பாஸ் வீட்டில் வரவில்லை.  இந்நிலயில் சிரித்து கொண்டே இருந்த ரியோ சண்டை போடும் காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோவில் இடம்பெற்றுள்ளது.

இந்த புரோமோ வீடியோவில் யார் யாரெல்லாம் முகமூடி போட்டு இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என பாலாஜி முருகதாஸ் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் சக்ரவர்த்தி ’ரியோவை உதாரணமாக கூறினார். அப்போது டென்ஷனான ரியோ, ‘என்னை உதாரணம் காட்டி கூற வேண்டாம், பாலாஜி கேட்ட கேள்விக்கு மட்டும் கூறுங்கள் என்று கூற நான் உன்னை உதாரணமாக கூறவில்லை நீ கூறிய எல்லாருக்கும் இரண்டு முகம் இருக்கும் என்பதை தான் சொல்ல வந்தேன்’ என்று கூற மீண்டும் ரியோ டென்ஷன் ஆனார்.

இதுவரை அமைதியாக சிரித்த முகத்துடன் இருந்த ரியோ தற்போது தனது உண்மையான முகத்தை காட்டி உள்ளதாக இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.