இன்றைய இரண்டாவது புரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பு, ஈடுபாடு, மற்றும் போட்டியிடும் தன்மையை கருத்தில் கொண்டு, உங்களை நீங்களே வரிசை படுத்திகொண்டு, அதற்கான காரணத்தையும் கூறவேண்டும் என பிக்பாஸ் தெரிவித்தார்.

இதனால், தன்னை ஆரி கார்னெர் செய்வதாக உணர்ந்த ரியோ... கோவத்தோடு எழுந்து சென்ற காட்சியும் இடம்பெற்றது. இதை தொடர்ந்து வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், முதல் இடத்திற்காக ரியோ, அசிங்கமாக சண்டை போடுவது இவரது மற்றொரு முகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது.

தற்போதைய புரோமோவில், ஆரியிடம் மொத்த கேமுக்கு பேசுங்கள் என்கிற போது, அப்படியே வழிச்சி கூடி வந்து ஆஃப் டேக்கு மட்டும் வச்சி பேசுனா என்ன பண்றது என ரியோ ஆவேசமாக பேசுகிறார். இதற்க்கு ஆரி ஹெல்தியாக பேசும் போது ஏன் இவ்வளவு இரிடேட் ஆகி பேசுறீங்க என கேட்கிறார். இதற்கு ரியோ, நான் ஹெல்தியாக தான் பேசுகிறேன். நீங்க ஹெல்தியா பேசவில்லை என்பதை உங்களுக்கு புரிய வைக்கிறேன் என கூறுகிறார்.

100 சதவீதம் ஒரு வேலையை நான் செய்திருக்கிறேன் அதனால் நான் முதல் இடம் என கூறுவதாக வாதிடுகிறார். இதற்கு ஆரி, அந்த இரண்டு பெண்கள் விட்டதால் தான் நீங்கள் பிடித்தீர்கள் என ரியோவை செம்ம டேமேஜ் செய்கிறார். அவங்க எனக்கு விடவும் இல்லை விட்டுக்கொடுக்கவும் இல்லை என ஆரிக்கு பதிலடி கொடுக்கிறார் ரியோ. 

பின்னர் ஆரி, நீங்கள் சிங்கிளாக விளையாடும் போது 3 பந்துகளை விட்டுருக்கீங்க. நான் ஒரு பந்தை விட்டிருக்கிறேன். இதற்க்கு நிகராக ஒரு பதிலை நீங்கள் சொல்லுங்கள் என, கூற... ரியோ இதற்க்கு பதில் சொல்லாமல் முதல் இடத்தை விட்டு தரமாட்டேன் என, அசிங்கமாக ஆரியை இரண்டாவது இடத்தை நீங்கள் எடுத்துக்கோங்க என கூறி விட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து செல்கிறார். இது ரியோவில் மற்றொரு முகத்தை வெளிக்காட்டுவது போல் உள்ளது.

அந்த புரோமோ இதோ...