பிக்பாஸ் வீட்டில், நேற்றில் இருந்து நடைபெற்று வரும் பிக்பாஸ் கால் சென்டர் டாஸ்கால் பல்வேறு பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் நேற்று பாலாஜி - அர்ச்சனா , சனம் - சம்யுக்தா ஆகியோர் முட்டிக்கொண்டதை பார்தோம்.

ஆனால் தற்போது சனம் ஷெட்டி - அனிதாவை ரியோ பாராட்டினாரா, அல்லது வஞ்சகமாக புகழ்ந்தாரா என தெரியவில்லை. இதற்க்கு, சனம் அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு புரட்டி எடுப்பதை. பாலாஜி மற்றும் ஷிவானி சாப்பிட்டு கொண்டே ரசித்து கொண்டிருக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த புரோமோவில், ரியோ உங்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒரு அழகான நட்பு பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என கூறினேன் என கூறுகிறார். இதற்க்கு சனம் சொல்வதெல்லாம் சொல்லிவிட்டு அப்படியே பாசிட்டிவ் என கூறினால் அதை கேட்பதற்கு நான் முட்டாள் இல்லை என குரலை உயர்த்துகிறார்.

இதனால் காண்டான ரியோ தெரியாமல் சொல்லிவிட்டேன், உங்க ரெண்டு போரையும் தெரியாமல் பாராட்டி விட்டேன் என கூறிய பிறகும் சனம் மீண்டும் மீண்டும் பேசுகிறார். அனிதா செம்ம சைலண்டாக நின்று கொண்டிருக்கிறார். பின்னர் தனக்குள்ள சந்தேகத்தை ரியோவிடம் கேட்கிறார். குரூப்பிஸம், அன்பை தேடி செல்வது போன்றவற்றை நிறுத்த தப்பானா காலருக்கு போன் பண்ணி நீங்கள் சொல்லலாம் என கூறியது, ரியோவிற்கு கோவம் தலைக்கேறி தேவையில்லாமல் பேச வேண்டாம் என கோவமாக கூறுகிறார்.

ரியோ - சனம் முட்டி மோதிக்கொண்டு இருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடியான பாலாஜி - ஷிவானி இருவரும் இந்த சண்டையை பார்த்து சிரித்து கொண்டிருப்பது போல் காட்டப்படுகிறது.

இதுகுறித்த புரோமோ இதோ...