பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம், ஒரு அணியினர் ரோபோவாகவும், மற்றொரு அணியினர் மனிதர்களாகவும் இருந்தனர். இந்த டாஸ்கில் அனிதா நான் 5 பேர் செய்ய வேண்டிய சமையல் வேலையை ஒரே ஆளாக இருந்து மொத்தம் 13 பேருக்கும் சமைத்தேன் என கமல் முன் கண்ணீர் பொங்க பொங்க ஆதங்கத்துடன் தெரிவித்து, தன்னை ஜெயிலுக்கு அனுப்பியதில் என்ன நியாயம் என கேட்டார்.

மேலும் செய்திகள்: குட்டி நயன்தாரான்னா சும்மாவா?... இந்த வயசிலேயே ஹாலிவுட் ஹீரோயின் லெவலுக்கு போஸ் கொடுத்த அனிகா...!
 

இதனை பற்றி ரியோ பேசும் காட்சிகள் தான் இன்றைய இரண்டாவது புரோமோவில் வெளியாகியுள்ளது. "அனிதா தனி ஆளாக இருந்து சமைத்தேன் என ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார்... அவங்க உதவி வேண்டும் என கேட்டிருந்தால் கண்டிப்பாக ஹெல்ப் பண்ணி இருந்திருப்போம் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்பினேன். அதே நேரத்தில் இந்த காரணங்களுக்காக நான் அனிதாவை நாமினேட் செய்யவில்லை என்பதையும் தெரிவிக்கிறார் ரியோ.

பின்னர் அனிதா ரியோவிடம் என்கிட்ட எதாவது பேசணும் என்றால் என்னிடமே பேசி இருக்கலாமே என கேட்க, அதற்க்கு ரியோ உங்க கிட்டதான் பேசினேன் என சொல்கிறார். அங்க நின்னா பதில் சொல்லமாட்டாங்க என பேசுனீங்களா...? என்று அனிதா பேசி கொண்டே இருக்கும் போது ரியோ அவரை கடந்து செல்கிறார். திடீர் என அனிதா ஏன் தைரியம் இல்லமால் போறீங்க என ரியோவை நோக்கி கேட்கிறார்.

மேலும் செய்திகள்: என் கண்களின் இன்னொரு உணர்வை இழந்திருக்கிறேன்! தேசிய விருது பெற்ற கலை இயக்குனருக்கு பாரதிராஜா இரங்கல்!
 

வாட் யு மீன்? என கூறி தைரியம் இல்லை என்கிற வார்த்தையை எல்லாம் இங்க வச்சிக்காதீங்க என சண்டை போட, அனிதாவும் விடாப்பிடியாக அப்படிதான் நீங்கள் செல்வதாக கூறுகிறார்.

தொடர்ந்து பேசும் ரியோ, தைரியம் இல்லாமல் கதவை தாண்டி போய்விட்டேனா என கேட்க, அனிதா கூலாக ஏன் கத்துறீங்க என கேட்கிறார். உடனே ரியோ தைரியம் இல்லாமல் போறேன் என சொல்றீங்க பார்த்து பேசுங்க என கடுப்பில் பேசுவது தற்போதைய புரோமோவில் வெளியாகியுள்ளது.