ஹிந்தி, பெங்காலி மற்றும் தமிழ் என பல மொழி படங்களில் நடித்துள்ளவர் 36 வயதாகும் நடிகை ரியா சென். இவர் பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால், நடிகர் பிரஷாந்துடன் குட் லக் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  இவர் தனது காதலரான ஷிவம் திவாரியை புனேவில் ஆகஸ்ட் 18ம் தேதி நேற்று திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தற்போது அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நடிகை ரியாசென்னுக்கு நியூஸ் பாஸ்டின் வாழ்த்துக்கள்.