பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவி எலிமினேட் ஆன பிறகும் கூட அவரை வெளியேற்றாமல், மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அவரை தங்க வைத்துள்ளனர் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள். இதனால் பிரச்சனைகள் இன்னும் அதிகமாக தான் செய்திருக்கிறது. 

ஒருவர் பற்றி ஒருவரிடம் குறை சொல்லுவது போட்டுக்கொடுப்பது போன்ற வேலைகளில் ஜூலி போலவே செயல்படும் வைஷ்ணவி தற்போது பிக் பாஸ் விட்டில் செய்து வரும் வேலைகள் அவர் மீது சக போட்டியாளர்களின் வெறுப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.


இன்று வெளியாகி இருக்கும் பிக் பாஸ் ப்ரோமோவில் இரு அணியினருக்கும் இடையேயான போட்டியின் போது  டேனி மற்றும் மஹத் இடையே சண்டை நடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 
தொடர்ந்து இப்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஐஸ்வர்யா வைஷ்ணவியிடம் கோபமாக கத்துகிறார். வைஷ்ணவி இந்த டாஸ்கின் போது ரித்விகாவின் கைகளை பின்னால் பிடித்து கொண்டதால் அவரால் டாஸ்கில் ஈடுபட முடியாமல் போயிருக்கிறது. சும்மாவே ரித்விகா டாஸ்கில் ஸ்லோ… இதில் கையை வேறு கட்டினால் என்ன ஆகும்? 
இதனால் தங்கள் அணி தோற்றுவிட வாய்ப்பு அதிகம் என்பதால் வைஷ்ணவியிடம் சண்டை போடுகிறார் ஐஸ்வர்யா. 

இதே போல வேறு ஏதோ ஒரு விஷயம் கூறும் போதும் வைஷ்ணவியை பார்த்து ” யு ஷட் அப் வைஷ்ணவி. அதை பத்தி பேச உனக்கு தகுதி இல்லை” என்று கூறி இருக்கிறார் ரித்விகா. இதனால் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.