பிக்பாஸ் டைட்டில் வென்ற பிறகு, ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட, ரித்விகாவுக்கு அவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து, தற்போது இவர் காமெடி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ரித்விகா. இதற்கு ,முன் பாலா இயக்கத்தில் வெளியான 'பரதேசி' , 'நினைத்தது யாரோ' போன்ற சில படங்களில் நடித்தவர். குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி, மக்களின் மிகப்பெரிய ஆதரவோடு டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை பெற்றார்.

அடுத்தடுத்து சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் கமிட் ஆனாலும் , இதுவரை தமிழ் திரையுலகில் வலுவான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இந்நிலையில் இவர் பிரபல காமெடி நடிகரான காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் பிரம்மா இப்படத்தை இயக்குகிறார். கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்தபிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நடிகர் காளி வெங்கட் பல படங்களில் காமெடி வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்திருந்தாலும்... கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'ராஜா மந்திரி' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.