ராஷ்மிகா மீதுள்ள பகையை மறக்காத காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி - கொந்தளிக்கும் ரசிகர்கள்
கிரிக் பார்ட்டி படத்தின் 8-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ரிஷப் ஷெட்டியின் எக்ஸ் தள பதிவு ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள், கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் எக்ஸ் தள பதிவால் கடுப்பாகியுள்ளனர். இந்த பதிவு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி உள்ளது. ராஷ்மிகா ரசிகர்கள் இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ரிஷப் ஷெட்டிக்கும் ஆதரவாகவும் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. ரிஷப் இடத்தில் யார் இருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பார்கள் என மல்லுக்கட்டி வருவதால் இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கிரிக் பார்ட்டி படம் ரிலீஸ் ஆகி 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இயக்குனர் ரிஷப் ஷெட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் "கிரிக் பார்ட்டி எங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக 8 வருஷங்கள் ஆகிவிட்டன, பல அழகான நினைவுகளும் உங்கள் அன்பும் இந்த பயணத்தை அர்த்தமுள்ளதாக்கியுள்ளன. உங்கள் ஆதரவுக்கு நன்றி" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் அதில் பணியாற்றி சில நடிகர்களை டேக் செய்திருந்தாலும், ராஷ்மிகாவை டேக் செய்யவில்லை. மேலும் படத்தின் புகைப்படத்தையும் ராஷ்மிகா இல்லாத புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்... ராஷ்மிகாவின் லவ்வருடன் மோதும் அல்லு அர்ஜுன்.. புஷ்பா 3 வில்லன் இவர்தான்?
ராஷ்மிகா மந்தனா 2016-ல் ரிஷப் ஷெட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி படம் மூலம் தான் ஹீரோயினாக அறிமுகமானார். அவரின் முன்னாள் காதலன் ரக்ஷித் ஷெட்டி தான் அவருக்கு இந்த பட வாய்ப்பை வாங்கித்தந்தார். வெறும் 4 கோடி ரூபாயில் தயாரான இந்த படம் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூலித்து சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு பின்னர் ராஷ்மிகாவுக்கு டோலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஷ்மிகாவுக்கு நேஷனல் கிரஷ் என்ற பட்டமும் கிடைத்தது. பெயர் புகழ் வந்ததும் ராஷ்மிகா கன்னட திரையுலகையே மறந்துவிட்டார். ஒரு பேட்டியில் ரிஷப் ஷெட்டி மற்றும் ரக்ஷித் ஷெட்டியை அவமதிக்கும் விதமாக பேசினார். அதன் பிறகு ரிஷப் ஷெட்டி, ராஷ்மிகாவுக்கு தக்க பதிலடியும் கொடுத்தார்.
இறுதியில் தனது தவறை மறைக்க முயன்ற ராஷ்மிகா, "எனக்கு சினிமாவில் வழி காட்டியவர்கள் ரிஷப் மற்றும் ரக்ஷித்" என்று கூறினாலும், அது மனதார சொன்னதாகத் தெரியவில்லை. இந்த கோபம் இன்னும் ரிஷப் ஷெட்டியை விட்டு விலகவில்லை என்பது அவரின் தற்போதைய எக்ஸ் பதிவின் மூலம் தெரிகிறது. ராஷ்மிகா செய்ததற்கு இதுதான் சரி, ரிஷப் எந்தத் தவறும் செய்யவில்லை. யார் வேண்டுமானாலும் இப்படித்தான் செய்திருப்பார்கள் என்று ரிஷப் ரசிகர்கள் கூறினாலும், ராஷ்மிகா ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். ரிஷப் ஷெட்டி ராஷ்மிகாவை மறந்தது சரியல்ல. இந்த படத்தின் வெற்றிக்கு அவரது பங்கும் பெரியது என்கின்றனர்.
இந்த சர்ச்சையை பற்றி கவலைப்படாத ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், எட்டு வருட பயணத்தை நினைவுகூர்ந்தார். "எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை நான் செய்தது எல்லாம் உங்கள் அன்பு மற்றும் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. நன்றி" என்று எழுதியுள்ளார்.
இதையும் படியுங்கள்... எனக்கு பீலீங்ஸ் பாடல் ஷூட் கஷ்டமாகவே இருந்தது: ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்!