ராஷ்மிகாவின் லவ்வருடன் மோதும் அல்லு அர்ஜுன்.. புஷ்பா 3 வில்லன் இவர்தான்?
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய புஷ்பா 2 திரைப்படம். 6 நாட்களில் 1000 கோடி வசூல் செய்த இந்தப் படத்திற்கு அடுத்த பாகம் வருகிறது. இந்தப் பாகத்தில் ரவுடி ஹீரோ நடிக்கிறாராம். அவர் யார், எந்த ரோலில் நடிக்கிறார் என்பதை பார்க்கலாம்.

Pushpa 3 Movie Update
புஷ்பா 2 திரைப்படம் நாடு முழுவதும் சக்கைப் போடு போட்டு கொண்டிருக்கிறது. 1000 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் அதிக வசூலுடன் முன்னேறிக்கொண்டிருக்கிறது புஷ்பா 2. இந்தப் படத்தில் இவ்வளவு பெரிய நடிகர்கள் இருந்தும், அவ்வளவு நன்றாக நடித்தும், அல்லு அர்ஜுனின் ஒன் மேன் ஷோவால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர் என்றே கூறலாம். இயக்குனர் சுகுமாரின் இயக்கம், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள், சாம் சி.எஸ்சின் பின்னணி இசை, ராஷ்மிகா மந்தனா என நட்சத்திர பட்டாளம் வெற்றிக்கு வழிவகுத்தது.
Allu Arjun
குறிப்பாக அல்லு அர்ஜுனின் ஜாத்ரா எபிசோட் ரசிகர்களுக்குக் கூஸ்பம்ப்ஸ் தந்துள்ளது. ஜாத்ரா நடனம், ஜாத்ரா சண்டை, கிளைமாக்ஸ் சண்டை, அதற்கேற்ற பின்னணி இசை அற்புதமாக அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கு சில தேசிய விருதுகள் நிச்சயம் என்று சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.
Rashmika Mandanna
புஷ்பா 2 கிளைமாக்ஸில் குண்டு வைத்தது யார்? புஷ்பா 3 ராம்பேஜில் இன்னொரு ஸ்டாரை காட்டப்போறாங்கன்னு பெரிய விவாதம் எழுந்துள்ளது. டோலிவுட்டின் ரவுடி ஹீரோ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா தான் அந்த ரோலில் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Vijay Deverakonda
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் காதலர் நடிக்கிறது உண்மையா? என்று ஒரு பேட்டியில் ரஷ்மிகாவிடம் கேள்வி எழுப்ப, தனக்குத் தெரியாதுன்னு பதில் கூறியிருக்கிறார் ராஷ்மிகா.
Pushpa 3
விஜய் தேவரகொண்டா புஷ்பா 3 படத்தில் நடிக்கிறார் என்று பல பேர் நினைக்கிறார்கள். இது உண்மையாக வாய்ப்பு அதிகம். விஜய் தேவர்கொண்டா நடித்தால், புஷ்பா 3 படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகும் என்றும் சினிமா விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
Pushpa 3 Role Rumors
இந்தப் படம் இன்னும் இரண்டு வருஷம் கழிச்சுதான் ஆரம்பமாகும். சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் தங்கள் பணிகளை முடிச்ச பிறகு இந்தப் படத்தில் கவனம் செலுத்துவார்கள் என்பதால் புஷ்பா 3 பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷிகா விஷாலுக்கு கொடுத்த காதல் பரிசு; என்ன தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.