Kantara Chapter 1 First Look : பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் காந்தாரா. மக்கள் மத்தியில் மொழிகளை தாண்டி வெற்றிகண்ட படமிது. 

கடந்த சில ஆண்டுகளாகவே கன்னட திரை உலகம் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்திற்கு மாறி உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. அதற்கு சான்றாக அமைந்த திரைப்படங்கள் தான் கேஜிஎப் மற்றும் காந்தாரா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கன்னட படமாக இருந்த பொழுதிலும் தமிழ் ரசிகர்களும் இந்த திரைப்படத்தை பெரிய அளவில் வரவேற்றனர். 

கன்னட திரையுலகில் பல சின்னஞ்சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, இன்று ரிஷப் ஷெட்டி ஒரு முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் மாறியுள்ளார் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக காந்தாரா படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், ரிஷப் செட்டியை நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Koose Munisamy Veerappan: ‘கூச முனிசாமி வீரப்பன்’ தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸின் டிரெய்லரை வெளியானது!

இந்நிலையில் அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம், அதாவது Kantara Chapter 1 படத்தின் First Look போஸ்டர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இப்பொது வெளியாகி இணையத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

Scroll to load tweet…

வெளியாகியுள்ள தகவலின்படி நாளை மறுநாள் திங்கள் அன்று நவம்பர் 27ம் தேதி மதியம் 12.25 மணிக்கு காந்தாரா படத்தின் First Look போஸ்டர் வெளியாகவுள்ளது. அன்றைய தினமே இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு பணிகளும் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே வெளியான காந்தாரா படத்திற்கு முன் நடந்த கதைகள் குறித்த படம், சுமார் 300 முதல் 400 ADயில் நடந்த சம்பவங்களை கொண்டு உருவாக்கப்படவுள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.