பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ரியோ ராஜுக்கு குழந்தை பிறந்த 6 மாதம் ஆகும் நிலையில், முதல் முறையாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக, தன்னை அறிமுக படுத்தி கொண்டு, தற்போது நடிகராக மாறி வெள்ளித்திரையில் நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ரியோ ராஜ், இதுவரை குழந்தை பிறந்ததில் இருந்து, குழந்தையின் கால்களை மட்டுமே கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் புகைப்படமாக எடுத்து வெளியிட்டார். இதை தொடர்ந்து தன்னுடைய மகள் முகத்தை முதல் முறையாக ரசிகர்களுக்கு காட்டியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் அனைவருக்குமே, சரியான பட வாய்ப்புகள் எளிதில் அமைந்து விடுவது இல்லை. ஆனால் அந்த அதிர்ஷ்டம், நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது. இவரை தொடர்ந்து மா.கா.பா, ரக்ஷன், ரியோராஜ் ஆகியோர் வெள்ளித்திரையில் தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.

கடந்த வருடம், சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகன் அவதாரமெடுத்தார் ரியோ. இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இவர் பத்ரி இயக்கத்தில் ப்ளான் பண்ணி பண்ணனும் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரியோ ராஜ் மனைவி ஸ்ருதி, கர்ப்பமாக இருந்த நிலையில், இவர்களுக்கு மார்ச் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு முடிவடைந்துள்ள நிலையில் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவருடைய மகள் ரித்தி பார்ப்பதற்கு அப்படியே, அவருடைய அம்மா ஸ்ருதியை போலவே உள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.