இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1990ஆம் ஆண்டு வெளியான 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரிச்சர்ட். இந்த படத்தை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு 'காதல் வைரஸ்' படத்தில் கதாநாயகனாக மாறினார். தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்தாலும், இதுவரை முன்னணி நாயகன் என்கிற இடத்தை மட்டும் எட்ட முடியவில்லை.

இந்நிலையில், தற்போது இவர் நடிப்பில்,'வச்சி செஞ்சிட்டான்' என்கிற திரைப்படம்  விரைவில் திரைக்கு வர உள்ளது.  இந்த படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரிச்சர்டிடம், பிரபல பத்திரிக்கை ஒன்று அஜித்துடன் நடிப்பீர்களா என எழுப்பியுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள அவர், கண்டிப்பாக அஜித்துடன் நடிக்க வாய்ப்பு வந்தாலும் அதனை ஏற்க மாட்டேன் என கூறியுள்ளார். 

பல நடிகர், நடிகைகள், பணியாற்ற ஆசைப்படும் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்துடன், அவரின் மைத்துனர் ரிச்சர்ட் இணைந்து நடிக்க மாட்டேன் என கூறியுள்ளது கேட்பதற்கே சற்று அதிர்ச்சியாகத்தான் உள்ளது. இதுகுறித்து ரிச்சர்ட் கூறுகையில், திரைப்படம் வேறு... குடும்பம் வேறு அதனால் அவருடன் கண்டிப்பாக இணைந்து நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

பின் 'வச்சி செஞ்சுட்டான்'  படம் பற்றி பேசிய அவர், இந்த படம்  சமூகத்திற்கு ஒரு முக்கிய செய்தியை சொல்லும்  படமாக இருக்கும் என்றும், இந்த படத்தில் ஐடியில் வேலை செய்யும் இளைஞராக நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சிறந்த கதைக்காக தான் காத்திருப்பதாகவும், விரைவில் திரையுலகில் தனக்கான இடம் கிடைக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.