சின்மயி 14 வருடங்களுக்கு அப்புறம் புகார் கொடுக்கும்போது, நாம் 14 வாரங்கள் தள்ளி அப்பாவுக்கு வக்காலத்து வாங்கினால் போதாதா என்று நினைத்தோ என்னவோ வைரமுத்துவின் இரண்டு குட்டிக்கவிஞர்களும் மிகத்தாமதமாக தங்கள் பேனாவைத் திறந்திருக்கிறார்கள். அந்தோ பரிதாபம் அவர்களது ஆதரவும் கூட இன்னும் சில சர்ச்சைகளையே வளர்த்தெடுத்திருக்கிறது.

மதன் கார்க்கி கூட பரவாயில்லை. ஆனால் மந்தக்கவிஞர் கபிலனின் வைரமுத்து புராணம் படு ஏளனத்துக்கு ஆளாகியிருக்கிறது, அப்பா இளமைக்காலத்திலிருந்து எப்படி கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தார் என்கிற அவரது நீலிக்கண்ணீர் சின்மயி புகாருக்கு பதிலாக பொருந்திப்போகவில்லை.

ஆக வைரமுத்துவை விட்டுவிட்டு அவரது மகன்கள் இருவரையும் நெட்டிசன்கள் வைத்து வறுத்தெடுக்கிறார்கள்.

...பொறக்கும்போதே வெள்ளை ஜிப்பாவோட பொறக்கலை. எங்கப்பா அந்த மாதிரி கேவலமான காரியத்தையெல்லாம் செய்திருக்கமாட்டார்.. அப்படி செய்யற ஆள்கிடையாதுன்னு நம்பிக்கை வெச்சி ஒரே போடுபோட்டிருந்ததா ஓக்கே ...

அதைவிட்டுப்புட்டு, அவர் பொறக்கும்போதே வெள்ளை ஜிப்பாவோட பொறக்கலை. காலேஜுக்கு போக கால்ல செருப்புகூட கெடையாது.. 150 ரூபா பீஸ் கட்டவே நாயா பேயா அலைஞ்சாருன்னு என்னெனத்தையோ சொல்லி வைரமுத்து பையன் கபிலன் ஒரு அறிக்கை விட்டிருக்காரு..

கேஸ் என்ன?  சின்மயி கையை புடிச்சி இழுத்தியா இல்லையான்றதுதான்.

பரதேசி வம்சமா இல்லை பக்கிங்காம் பேலஸ் வம்சமான்றதெல்லாம் இப்போ மேட்டரே இல்லை...

நடக்கிற கூத்தைப் பார்க்கிறபோது அண்ணனும் தம்பியும் ஒரேயடியாக சைலண்ட் மோடிலேயே இருந்திருக்கலாமோ என்றே தோன்றுகிறது.