உடன் வந்த சேரன்,அருண் விஜய், சாருஹாசன் படங்கள் எல்லாம் ஈ ஓட்டிக்கொண்டிருக்க, ஓவியாவின் 90 எம்.எல்’ படம் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரிலீஸாகும் அன்றே பத்திரிகையாளர்களுக்கு படத்தைப்போட்டுக் காட்டினால் நெகடிவ்வாக எழுதி வசூலைக் கெடுத்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் நேற்று அறிவித்திருந்த பத்திரிகையாளர் காட்சியை ரத்து செய்தார் நடிகை ஓவியா. ஸோ... நான்கு முகநூல் பிரபலங்களின் கருத்து இதோ...

’சந்தேகமே இல்லாமல் அட்டகாசமான படம். இம்மாதிரிக் கதைகளை எவ்வளவோ பேசியிருக்கிறோம். அமுக்கி வாசிப்பார்கள். எழுதினவைகள் கூட மூழ்கிப் போச்சு. மனதின் உள்ளே இருக்கிற பரிசுத்த வேஷத்தை சீண்டுகிற எவற்றின் மீதும் கோபம் வருவது எதற்காக என்பது யோசித்தால் புரியும். இந்தப் படம் செமத்தியாக துடையில் கிள்ளுகிறது.நினைத்த வடிவத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் போலும். இந்தப் படத்தை இப்படி எடுத்திருக்க வேண்டும் போன்ற அதிகப்பிரசங்கித்தனம் இல்லாமல் ஓன்று சொல்ல வேண்டுமென்றால் படம் ஒரு நோக்கத்தோடு இருக்கிறது. அப்படி ஒரு நெத்தியடி தான். செக்ஸ் காட்சிகள் நன்றாகவே இருக்கின்றன. குடும்பத்தோடு, குழந்தைகளோடு தான் படம் பார்ப்பேன் என்கிறவர்கள் மாற்றுப் பாதைக்கு போகலாம். இப்படி எல்லாம் இப்போதாவது வந்திருக்கிறதே என்பது பெரிய ஆசுவாசம். தீம் பார்க் சினிமாக்களுக்கு இனிமேல் ஒரு சவாலுண்டு.படத்தின் இயக்குனர் பெண். அல்லாமல் இவ்வளவு துணிச்சல் ஏது? 90 ml தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. சந்தேகத்துடன் பார்க்காமல் இருந்து விட வேண்டாம்.காதலி, மனைவி, துணைவி, இறைவி யாரையும் அழைத்து செல்லலாம். அல்லது அவர்கள் பார்க்கப் போனால் தடுக்காமல் இருக்கலாம்.
-மணி எம்.கே.மணி.

...தமிழ் சினிமா இயக்குனர்கள் ஆடியன்ஸுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால், தயவு செய்து இந்த இரு பிரச்சினைகளைப் பற்றி படங்களில் பேசுவதை விட்டுவிடவும் : 1. விவசாயிகளின் பிரச்சினைகள். 2. பெண்களின் சுய இன்பச் சிக்கல்கள்
போதும்ப்பா சாமிகளா! [கமெண்டில் Suresh Kannan ...முதல் விஷயம் ஓகே. இரண்டாவது இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு? அதுக்குள்ளே கேட்டை மூடினா எப்படி? :)]
-செங்கோவி.

ஃபீல் குட் படம் என்று சொல்வார்கள். ஃபீல் வெரி வெரி குட் ஃபில்ம் என்று 90 எம்.எல் படத்தைக் கூறலாம்.

இந்த இதழ் ஆனந்த விகடனில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ விரும்பும், உறவுகளை பந்தமில்லாமல் பாசத்துடன் மட்டும் வைத்துக்கொள்ள விரும்பும் பெண்ணை குறித்து தமிழ் மகன் ஒரு கதை எழுதியிருக்கிறார். 90 எம் எல் படமும் அதே போல திருமணமின்றி உறவுடன் தன்னிச்சையாக வாழ விரும்பும் பெண்ணையும், பிற பெண்களின் சுய விகசிப்பையும் அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ளது.

திருமணம் போன்ற மறு உற்பத்தி எதிர்பாலுறவு இயல்பாக்கத்தை முன்னெடுக்கும் பழக்கங்கள் முடிவுக்கு வருவது மிக ஆரோக்கியமானது என்பதில் ஐயமில்லை. மனித குலம் உண்மையான ஆன்ம விடுதலையை நோக்கி சிறு அடியாவது எடுத்து வைக்கும். -ராஜன்குறை.

...90ml படம் பெண்ணுரிமை பேசும் படம் என வாதிடும் பெண்கள் தில் இருந்தால்,திராணி இருந்தால் அவர்கள் மகளை (18வயது ஆன)தியேட்டருக்கு அழைத்துச்சென்று பார்த்து வாருங்கள் பார்ப்போம்? ஆம்பளைக்கு இணையாக தண்ணி அடிப்பது தம் அடிப்பது கஞ்சா அடிப்பது அல்ல பெண் உரிமை...-சி.பி.செந்தில்குமார்.