ஆஸ்கர் விருது மூலம், இந்தியாவிற்கே பெருமை சேர்த்த, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பாலிவுட் திரையுலகம் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டியது, மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவருக்கு ஆதரவாக திரையுலகை சேர்ந்த பலர் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்... குடும்பத்துடன் இருக்கும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ..!
 

இந்நிலையில், இவரை தொடர்ந்து  சவுண்ட் மிக்ஸிங் பணிக்காக ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர் ரசூல்பூ குட்டியும் , தான் பாலிவுட் திரையுலகில் இருந்து புறக்கணிக்கப்பட்டதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ .ஆர் .ரகுமானுக்கு இரு ஆஸ்கர் விருதுகளை பெற்று தந்த Slumdog Millionaire படத்தின் சவுண்ட் மிக்ஸிங்காக இவருக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. மேலும் பத்மஸ்ரீ, தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். 

மேலும் செய்திகள்: குட்டி குஷ்பு நடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டை பார்க்கலாம் வாங்க..!
 

பாலிவுட் திரையுலகில் பல படங்களில் இவர் பணியாற்றிய இவருக்கு, குறிப்பாக ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு பாலிவுட் பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. மேலும் இந்தி திரையுலகை சேர்ந்த சிலர், இவருடைய முகத்திற்கு நேராகவே உங்கள் வேலை தங்களுக்கு வேண்டாம் என கூறியது வருத்தத்திற்கு கூறியது என தெரிவித்துள்ளார்.

ரசூல்பூ குட்டி, தமிழில் எந்திரன், நண்பன், கோச்சடையான் , ரெமோ, 2.௦ ஆகிய தனித்துவமான படங்களை தேர்வு செய்து நடித்து மிகவும் பிரபலமானவர். ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு கொடுத்த குரல்கள் இவருக்காகவும் ஒலிக்க துவங்கியுள்ளது. பலர் பாலிவுட் திரையுலகின் முகத்திரை வெளிப்பட்டு வருவதாகவும் கூறி வருகிறார்கள் .