பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள புதிய புரோமோவில் பிக்பாஸ் வீடே கண்ணீரில் மூழ்கியுள்ளது.

அதாவது இன்று, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது.  இதில் ஒரு பௌலில் உள்ள தாள்களில் என்ன எழுதி இருக்கிறதோ அதை போட்டியாளர்கள் செய்ய வேண்டும்.

அந்த வகையில் ரேஷிமாவிற்கு, உங்கள் குடும்பத்தில் யாருடைய இழப்பு உங்களை அதிகம் பாதித்தது என எழுதப்பட்டிருந்ததை பாத்திமா பாபு படிக்கிறார். இதற்கு பதிலளித்த ரேஷ்மா, நான் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்தபோது மருத்துவமனையில் ரொம்ப நாள் இருந்தேன். டாக்டர் குழந்தையின் ஹார்ட் பீட் நின்றுவிட்டதாக கூறி இனி ஒன்றும் பண்ண முடியாது என சொல்லிவிட்டனர் என கதறி அழுதார்.

இதைக் கேட்ட மற்ற பிரபலங்களும், சோகம் தாங்காமல் அழுகின்றனர். இதனால் பிக்பாஸ் வீடே கண்ணீரில் மூழ்கியது. இதுதான் என் வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத சோகம் என கூறுகிறார்.


அதேபோல் பலரும், எதுக்கு அடிக்கடி us போயிட்டு வரேன்னு கேப்பாங்க. அங்குள்ள கல்லறையில் தான் தன்னுடைய குழந்தையின் சமாதி உள்ளது என, தன் மனதில் உள்ள மறக்க முடியாத வேதனையை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டுள்ளார் ரேஷ்மா.  பின் அனைவரும் இவருக்கு அனைத்து ஆறுதல் கூறும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.