3 நாள் தான் டைம்... தலைவன ரிலீஸ் பண்ணலேனா அவ்ளோதான் - கோதாவில் இறங்கிய டிடிஎப் ரசிகர்

டிடிஎப் வாசனை மூன்று நாட்களில் ரிலீஸ் செய்யாவிட்டால் இதெல்லாம் நடக்கும் என எச்சரிக்கை விடுத்து ரசிகர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

release TTF vasan otherwise we will strike TTF fan shocking video gan

புகழ்பெற்ற யூடியூபரான டிடிஎப் வாசன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன் நண்பன் அஜீஸ் உடன் சேர்ந்து மகாராஸ்ட்ராவுக்கு பைக் டிரிப் ஒன்றை மேற்கொண்டார். அப்போது காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் அருகே சென்றபோது பைக்கில் வீலிங் செய்ய முயன்ற டிடிஎப் வாசன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பைக் சுக்குநூறாக நொறுங்கியது. வாசன் கவச உடைகள் முறையாக அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

இதையடுத்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் ஓட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை பாலுசெட்டி சத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிஎப் வாசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வாசனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... "மனைவி சொன்னா போனில் கூட படமெடுப்பேன்" - சுகாசினியுடன் ரோம் நகரில் மணிரத்னம் - வைரல் கிளிக்ஸ்!

release TTF vasan otherwise we will strike TTF fan shocking video gan

டிடிஎப் வாசனுக்கு ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே டிடிஎப் வாசனின் ரசிகர் ஒருவர் வாசனை ரிலீஸ் செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்துவேன் என்று எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது : “ஓப்பனா ஒன்னு சொல்லிகிறேன், இன்னும் 3 நாள் அல்லது ஒரு வாரத்துக்குள்ள அவன் வெளிய வரலேன்னா, கண்டிப்பா நான் ஸ்ட்ரைக் பண்லாம்னு இருக்கேன். 

இவன பார்த்து எல்லாரும் கெட்டுபோயிடுவாங்கனு சொல்லி தப்பான உதாரணத்தை கொடுத்து அவன் பெயரை கெடுக்குறாங்க. 23 வயசு பையன் ஜெயிலுக்கு போவான்னு நினைச்சி பாத்திருக்கீங்களா. அவன் மேல டிரிங் அண்ட் டிரைவ்னுலாம் கேஸ் போட்டிருக்காங்க. அவன் குடிக்கவே மாட்டான், ஆனா அவன் மேல இப்படி ஒரு கேஸ். ஒரு பையன டிராக் பண்ணி புடிக்கிற அளவுக்கு அவன் என்ன தீவிரவாதியா? என அந்த ரசிகர் ஆவேசமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... விஜய் டிவி 'கிழக்கு வாசல்' சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்! இனி அவருக்கு பதில் இவர் தான்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios