release the movie after a few days - Director request Tamil Rockers

உழைப்பை மதிப்பதாக இருந்தால் வேலைக்காரன் படத்தை கொஞ்ச நாள் கழித்து ரிலீஸ் செய்யலாம் என்று தமிழ் ராக்கர்ஸ்க்கு இயக்குனர் மோகன் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்..

மாபெரும் ஹிட் கொடுத்த தனி ஒருவன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் இன்று வெளியாகவுள்ள படம் வேலைக்காரன்.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முதன் முறையாக நயன்தாரா நடித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து சினேகா, பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

நேற்று நடந்த இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் மோகன் ராஜா , "புது படம் வந்தால் ஒரு வாரம் தியேட்டரில் ஓடுகிறது. ஆனால், வேலைக்காரன் இன்னும் ஒரு வாரம் சேர்த்து இரண்டு வாரம் தியேட்டரில் ஓடலாம் என்று எதிர்பார்க்கிறேன். அதன் பிறகு தான் அடுத்தடுத்த படங்கள் வந்துவிடுகிறது.

அதோடு இல்லாமல், தமிழ் ராக்கர்ஸ் வேற இருக்கு. இவர்கள் தான் பெரிய பிரச்சனையாக இருக்கு. இவர்கள் தான் மிகச்சிறந்த வேலைக்காரன், மூளைக்காரன். ஒவ்வொரு படத்திற்கும் தூங்காமல் வேலை பார்த்திருப்பான்.

உழைப்பை அவர்கள் மதிப்பதாக இருந்தால் வேலைக்காரன் படத்தை கொஞ்ச நாள் கழித்து ரிலீஸ் செய்யலாம்" என்று கூறியுள்ளார்.