சிவகார்த்திகேயன் சமீப காலமாக பெரும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் படம் எப்படி இருந்தாலும் சரி, ஹிட் என்ற நிலை உருவாகி விட்டது.

இந்நிலையில் அடுத்து இவர் மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இதற்கான பூஜை நவம்பர் மாதம் 11ம் தேதி நடக்கவுள்ளது.

ஆனால், சிவகார்த்திகேயன் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து தருவதாக கூறியுள்ளாராம்.

இதனால் தான் பிரச்சனையே என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது, அப்படி அந்த படத்தில் நடிக்காமல் சிவகார்த்திகேயன் வேறு படத்தில் நடித்தால் தயாரிப்பாளர்கள் சார்பில் சிவகார்த்திகேயனுக்கு ரெட் விதிப்பார்கள் என கிசுகிசுக்கப்படுகின்றது.