முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின் அவர் வகித்து வந்த முதலமைச்சர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வம் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல பொதுச்செயலர் பதவி சசிகலாவிற்கு சென்றது.
இந்நிலையில் பன்னீர் செல்வம் தான் தமிழக முதல்வராக நீடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீர் என ஓ.பன்னீர்செல்வம் சில நாட்கள் முன்பு ராஜினாமா செய்தார். மேலும் முதலமைச்சராக சசிகலா வரவேண்டும் என முன்மொழிந்தார்.
ஆனால் நேற்று ஜெயலலிதா சமாதியில் செய்தியாளர்களை சந்தித்து பல அதிர்ச்சி செய்தியை வெளியிட்டார்.
தான் சசிகலா தரப்பால் மிரட்டப்பட்டு தான் பதவியில் இருந்து விலகியதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் விரும்பினால் தான் ராஜினாமாவை திரும்ப பெறுவேன் என கூறினார். இப்படி தைரியமாக கருத்து கூறியுள்ள ஓபிஎஸ் பொறுமையாக தன்னுடைய கருத்தை கூறி இருந்தாலும், இப்போது இவர் கூறியுள்ளது தமிழக அரசியலில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதனால் பல பிரபலங்கள் இது பற்றி தங்களுடைய கருத்து கூறிவருகின்றனர்.
நடிகை குஷ்பூ புதிய ஹீரோ உருவாகிவருகிறார் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீ பிரியா ஹீரோ என கூறியுள்ளார் , அதே போல நடிகை ஸ்ரேயா ரெட்டி, எஸ்.வி.சேகர்,நடிகர் பாக்கியராஜ் , சாந்தனு பாக்கியராஜ், நடிகை ஸ்ரீ ரூபா மஞ்சரி, ஆர்யா,அரவிந் சாமி போன்ற பல பிரபலங்கள் நீங்கள் தான் ரியல் ஹீரோ என கூறிவருகின்றனர் மேலும் தங்களுடைய ஆதரவை தெரிவிப்பதாகவும் கூறி வருவருகின்றனர்.
