இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக டுவிட்டரில் போராடியது மட்டுமின்றி களத்தில் இறங்கி போராடினார். மேலும் ஜல்லிக்கட்டு குறித்து பாடல் ஒன்றையும் வெளியிட்டு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்பதை அறிந்த அவர் அவர்களுடன் இணைந்து தன்னுடைய எதிர்ப்பையம் ட்விட்டர் மூலம் காட்டியுள்ளார்.

இந்த ஆட்சி பிடிக்காதவர்கள் ஆளுநரை தொடர்பு கொண்டோ, இணையதளம் வழியாகவோ தங்களுடைத்து எதிர்ப்பை தெரிவியுங்கள் என இந்த தகவலை வெளியிட்டுள்ளார்...



அதே போல் சமீபத்தில் ரீ என்ட்ரி கொடுத்த ரோஜா பட நாயகன் அரவிந்த்சாமி மக்களின் எண்ண ஓட்டம் புரிந்து தான் டுவிட் செய்து வருகிறார். 

இதை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் நிலை குறித்து கூறியுள்ள அவர் 
 ‘என்னுடைய கருத்து இந்த விஷயத்தில், மக்களின் மனம் புரிந்து மறுதேர்தல் வைப்பதே நன்று’ என கூறியுள்ளார்.