நடிகை ஜோதிகா நடித்துள்ள 'ராட்சஷி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  இந்த படத்தில் பள்ளி ஆசிரியையாக ஜோதிகா நடித்துள்ளார்.  குறிப்பாக இப்படம் நடிகர் சமுத்திரக்கனி நடித்து வெளியான 'சாட்டை' படம் போல் உள்ளது என பலரும் தொடர்ந்து விமர்சனம் செய்தனர்.

'ராட்சஷி' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட நிலையில், சென்சார் அதிகாரிகளின் சான்றிதழுக்காக இப்படம் அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு 'யு ' சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இதனை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார். யு சான்றிதழ் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இந்தப் படம் வரும் ஜூலை மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜோதிகா, ஹரிஷ் பேராடி, பூர்ணிமா பாக்யராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கியுள்ளார்.