தமிழிலும் தெலுங்கிலும் மிக பிசியாக நடித்துவரும் ராஷ்மிகா மண்டன்னா தெலுங்கின் ’கீத கோவிந்தம்’என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்குப் போனவர். தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘சரிலேறு நீரெவ்வரு’ நிதினுடன் ‘பீஷ்மா’ ஆகிய படங்களில் நடித்துவரும் அவர் தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இளம் வயது படங்களைப் பதிவிட்டு மிக ஆபாசமாகப் பத்விட்ட ரசிகர் ஒருவரை மிகக் கடுமையாக எச்சரித்திருக்கும் நடிகை ராஷ்மிகா மண்டன்னா ‘நடிகைகள்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா?’என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழிலும் தெலுங்கிலும் மிக பிசியாக நடித்துவரும் ராஷ்மிகா மண்டன்னா தெலுங்கின் ’கீத கோவிந்தம்’என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்குப் போனவர். தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘சரிலேறு நீரெவ்வரு’ நிதினுடன் ‘பீஷ்மா’ ஆகிய படங்களில் நடித்துவரும் அவர் தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.
இடையில் தெலுங்குநடிகர் விஜய் தேவரகொண்டாவுடம் கிசுகிசுக்கப்பட்டபோது பரபரப்பாக அடிபட்ட இவரது பெயர் நேற்று முதல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. விஷயம் இதுதான். தனது இளம் பிராயத்துப்படங்கள் மூன்றை ஒன்று கோர்த்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ராஷ்மிகா. அதை தனது பக்கத்தில் டேக் செய்த ரசிகர் ஒருவர்...இந்த சிறுமி எதிர்காலத்தில் சர்வதேச விபச்சாரியாக [டாகர் என்பதன் கன்னட அர்த்தம்] வருவார் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்?என்று கமெண்ட் போட்டிருந்தார்.
அதைப்பார்த்துக் கொதிப்பின் உச்சத்துக்குப்போன ராஷ்மிகா,’நடிகைகள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமாகப் போய்விட்டதா? இனிமேல் இதுபோன்ற பதிவுகள் வந்தால் தகுந்த பதிலடி கிடைக்கும். இப்படி கமெண்ட் போட்டதன் மூலம் என்னையும் என் குடும்பத்தையும் புண்படுத்தியுள்ளீர்கள். நடிகைகள் என்றால் ஈவு இரக்கமில்லாமல் கமெண்ட் உங்கள் புத்தியை நினைத்தால் அருவெருப்பாக உள்ளது’என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 8, 2019, 1:36 PM IST