கன்னட மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. 2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்டி என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் சூப்பர் ஹிட்டக்க அங்கும் பிரபலமான ஹீரோயினாக மாறிப்போனார். 

இரண்டு மொழிகளும் முன்னணி நடிகர்களின் முதல் சாய்ஸாக உள்ள ராஷ்மிகா, செம்ம பிசியாக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் வெறும் இரண்டே படம் நல்லா ஓடியதும் தனது சம்பளத்தை லட்சத்தில் இருந்து கோடிக்கு மாற்றினார். இதை கேட்ட தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க தெருக்கோடிக்கு ஓடி வந்தது எல்லாம் தனி கதை.

இதையும் படிங்க: கொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது?... "அண்ணாத்தை"க்காக இப்படி ஆகிட்டாரே?

சமீபத்தில் தெலுங்கில் நிதினுடன் ராஷ்மிகா நடித்த பீஷ்மா படம்  திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். பிற நடிகைகளை போலவே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, தன் பங்கிற்கும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அம்மணியின் க்யூட் ரியாக்‌ஷன் போட்டோ ஷூட் இன்ஸ்டாவில் ரொம்ப பிரபலம். 

அந்த வகையில் சமீபத்தில் மஞ்சள் நிற கவுனில் விதவிதமான ரியாக்‌ஷனில் டக்கராய் போஸ் கொடுத்தார் ராஷ்மிகா மந்தனா. அதை பார்த்த நெட்டிசன்களுக்கு என்ன தான் தோணியதோ தெரியவில்லை, வைகை புயல் வடிவேலுவின் ரியாக்‌ஷன்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர். இதை பார்ப்பவர்களுக்கு ஒருவேலை வடிவேலு காமெடிகளை பார்த்து தான் ராஷ்மிகா இப்படி ஒரு போட்டோ ஷூட்டிற்கு பிளான் செய்தாரா...? என்று கூட என்னத் தோன்றும். அந்த அளவிற்கு பக்காவாக பிளான் பண்ணி ராஷ்மியை வச்சி செய்துள்ளனர் நெட்டிசன்கள். 

இதையும் படிங்க: "இருட்டில்" சுந்தர்சியை புரட்டி எடுத்த நடிகை... கையில் மதுக்கோப்பையுடன் கட்டிலில் அதகளமான போஸ்...!

என்ன தான் நெட்டிசன்கள் தன்னை கலாய்த்து இருந்தாலும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ராஷ்மிகா வடிவேலு மீம்ஸ் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்  “என்னால் இதனை ஒப்புக்கொள்ள முடியாது. வடிவேலு ரொம்பவும் கியூட்டாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.