'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ராஷ்மிகா ரஞ்சிதமே பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. எனவே படம் குறித்த புரொமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, டிசம்பர் 24 ஆம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக அறிவித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த அறிவிப்பு வெளியானது முதலே... ஆடியோ லாஞ்சுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில்... தற்போது மிகவும் பரபரப்பாக இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் 'வாரிசு' படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் மட்டும் இன்றி, திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். மேலும் சற்று முன்பு தான் தளபதி விஜய், மிகவும் எளிமையாக... எவ்வித ஆடம்பரமும் இன்றி ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுத்து அசத்தினார்.

செம்ம சிம்பிளாக... ஃபார்மல் பேன்ட் ஷர்ட்டில் மிரட்டலாக 'வாரிசு' ஆடியோ லாஞ்சுக்கு என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்!

இவரை தொடர்ந்து, ரசிகர்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபலமான நடிகை ராஷ்மிகா, வெள்ளை நிற உடையில்... கியூட் தேவதை போல் 'வாரிசு' இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தது மட்டும் இன்றி, அட்டகாசமாக ரஞ்சிதமே பாடலுக்கு ஆட்டமும் போட்டுள்ளார். 'ரஞ்சிதமே' பாடலின் நடன இயக்குனரான ஜானி மாஸ்டருடன், ஆடியோ லான்ச் மேடையில்.... ரஷ்மிகா டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் எலிமினேஷனில் இதை கவனித்தீர்களா.! பிளான் பண்ணி போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்களா?

Scroll to load tweet…