அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் டிரேக்கியோ தி ரூலரை, மர்மநபர்கள் சிலர் மேடையில் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் டிரேக்கியோ தி ரூலரை, மர்மநபர்கள் சிலர் மேடையில் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த இசை விழாவில், மேடைக்கு பின்னால் நடந்த பிரச்சனையின் காரணமாக அமெரிக்க ராப் பாடகர் டிராக்கியோ தி ரூலர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். டிராக்கியோவின் விளம்பரதாரர் ஸ்காட் ஜாவ்சன், இவரது மரணம் குறித்த தகவலை தற்போது உறுதி செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: Biggboss 5: பிக்பாஸ் வீட்டில் களைகட்டும் காதல் விளையாட்டு.. அமீரை தொடர்ந்து முத்த சர்ச்சையில் சிக்கிய அக்ஷரா!

28 வயதே ஆகும் டிராக்கியோவின், உண்மையான பெயர் டேரல் கால்டுவெல், வார இறுதியில் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் LA' என்கிற மேடை கச்சேரியில் ஹிப் ஹாப் நட்சத்திரங்களான ஸ்னூப் டோக், ஐஸ் கியூப், உள்ளிட்ட பலருடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். அதன்படி சனிக்கிழமை இரவு 8:40 மணியளவில் இந்த விழா நடைபெறும் இடத்தில் 'டிராக்கியோ' கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்: Tamannaah Bhatia birthday: கவர்ச்சியில் கரைக்கண்ட தமன்னா... சைசான உடலை காட்டி கிளாமரில் கலக்கிய போட்டோஸ்!

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலயில், ஞாயிற்று கிழமை உயிரிழந்தார். டிராக்கியோ 2015ஆம் ஆண்டிலிருந்து ராப் பாடல்களைப் பாடி வருகிறார். இவரின் பாடலை கேட்பதற்காக கடந்த சனிக்கிழமையன்று லாஞ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஏற்பாடு பல ரசிகர்கள் குவிந்த நிலையில் இவரது மரணம் குறித்த தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களின் நெஞ்சங்களையும் உலுக்கி உள்ளது.

மேலும் செய்திகள்: Kushboo Viral Photo : ச்சீ.. ச்சீ.. குஷ்புவா இப்படி? நடிகைக்கு உதட்டோடு உதடு முத்தம்! வைரலாகும் பழைய போட்டோ!

இவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை செய்த போது, நிகழ்ச்சி மேடையின் பின்புறம் இவருக்கும், மர்மநபர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது முற்றியதால் ஆத்திரத்தில் அந்த நபர் இவரை கொலை செய்தது தெரியவந்துளளது. அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்துவரும் நிலையில் பிரபல ராப் பாடகர் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.